வீடு / சமையல் குறிப்பு / புரோட்டின் பைட்டுகள்

Photo of PROTEIN BITES by Athilakshmi Maharajan at BetterButter
424
0
0.0(0)
0

புரோட்டின் பைட்டுகள்

Aug-02-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புரோட்டின் பைட்டுகள் செய்முறை பற்றி

புரதம் மிக்க கொண்டைக்கடலை மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படும் சுவையான கட்லெட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆறு மணி நேரம் ஊற வைத்து வேக வைத்த கொண்டைக்கடலை ஒரு கப்
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு பெரியது ஒன்று
  3. கேரட் 1 துருவியது
  4. பீன்ஸ் 5 பொடியாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய் 3 பொடியாக நறுக்கியது
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  8. மைதா மாவு 2 டீஸ்பூன்
  9. தண்ணீர் தேவைக்கேற்ப
  10. பிரட் க்ரம்ஸ் ஒரு கப்
  11. எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன்
  12. உப்பு சுவைக்கேற்ப
  13. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை தனித்தனியாக வேக வைக்கவும்
  2. உருளைக்கிழங்கையும் கொண்டைக்கடலையும் நன்றாக மசித்துக் கொள்ளவும்
  3. ஒரு பவுலில் உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, கேரட், பீன்ஸ் ஒன்றாக கலந்து நன்றாக பிசையவும்
  4. இத்துடன் பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக தட்டி இதய வடிவில் எடுத்து வைக்கவும்
  5. ஒரு பௌலில் மைதா மாவுடன் சிறிது உப்பு, மிளகு தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் கரைத்து பசையாக கரைக்கவும்
  6. ஒரு தட்டில் பிரட் க்ரம்ஸ் பரப்பி வைத்துக் கொள்ளவும்
  7. தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை மைதா கரைசலில் முக்கி பின் பிரட் க்ரம்ஸ் நன்கு புரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
  8. இப்போது மொறுமொறுப்பான புரோட்டின் பைட்டுகள் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்