வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கூட்டு

Photo of Snake gourd Koottu by Jayasakthi Ekambaram at BetterButter
384
0
0.0(0)
0

புடலங்காய் கூட்டு

Aug-03-2018
Jayasakthi Ekambaram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கூட்டு செய்முறை பற்றி

பாசி பருப்பும் புடலங்காயும் சேர்த்து செய்யும் கூத்து

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் கால் கிலோ
  2. பாசிப்பருப்பு 100 கிராம்
  3. வெங்காயம் ஒன்று
  4. சிறிய தக்காளி 2
  5. எண்ணெய் 3ஸ்பூன்
  6. கடுகு ஒரு ஸ்பூன்
  7. சீரகம் அரை ஸ்பூன்
  8. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  9. கறிவேப்பிலை ஒரு கொத்து
  10. பூண்டு இரண்டு பற்கள்
  11. தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. குழம்பு மிளகாய் தூள் ஒன்றரை ஸ்பூன்
  14. கொத்தமல்லித் தழை ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்
  2. தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்
  3. புடலங்காயை பொடியாக அரிந்து கொள்ளவும்
  4. பூண்டு பற்கள் லேசாக நசுக்கிக் கொள்ளவும்
  5. பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து கழுவிக் கொள்ளவும்
  6. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்
  7. கடுகு பொரிந்ததும் சீரகம் தாளிக்கவும்
  8. பிறகு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  9. தக்காளியை கூழாகும் வரை வதக்கிக் கொள்ளவும்
  10. புடலங்காயை போட்டு வதக்கிக் கொள்ளவும்
  11. சோம்புத் தூள், பூண்டு, கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்
  12. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் சேர்க்கவும்
  13. தண்ணீர் கொதித்ததும் பாசிப் பருப்பை அதில் போடவும்
  14. தேவையான அளவு உப்பு போட்டு சிறிய தீயில் வைத்து மூடி வைக்கவும்
  15. பருப்பும் காயும் வெந்த பிறகு தேங்காய் துருவலை சேர்க்கவும்
  16. கெட்டி பதம் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்யவும்
  17. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
  18. கொத்தமல்லித் தழையை மேலே தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்