வீடு / சமையல் குறிப்பு / சோயா சென்னா வறுவல்

Photo of Soya chickpea fry by Rachell Revathi Samuel at BetterButter
225
0
0.0(0)
0

சோயா சென்னா வறுவல்

Aug-04-2018
Rachell Revathi Samuel
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா சென்னா வறுவல் செய்முறை பற்றி

சோயா மற்றும் சுண்டைக்கடலை சேர்த்து செய்யப்படும் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுண்டக் கடலை 1/4 கப்
  2. சோயா (மீல் மேக்கர்) 1/4 கப்
  3. எண்ணெய் பொரிக்க
  4. வெங்காயம் 1
  5. பட்டை 1
  6. கிராம்பு 2
  7. ஏலக்காய் 1
  8. அன்னாசி பூ 1
  9. பிரியாணி இலை 1
  10. கருவேப்பிலை சிறிது
  11. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  12. தக்காளி 1
  13. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  14. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  15. கரம் மசாலா 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சுண்டக் கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து பின் குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
  2. சோயாவை சுடு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்
  3. தண்ணீர் பிழிந்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோயாவை எண்ணெயில் போடவும்.
  5. பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் அன்னாசி பூ சேர்க்கவும்.
  7. நறுக்கிய வெங்காயம கருவேப்பிலை் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  8. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  9. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.
  10. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா சேர்த்து கிளறவும்
  11. வேகவைத்த சுண்டக் கடலை சேர்க்கவும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  12. பொரித்த சோயாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  13. மசாலா சுண்டக் கடலை மற்றும் சோயாவில் ஏறும் வரை வதக்கவும்.சுவையான சோயா சென்னா வறுவல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்