வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயறு இட்லி/ தோசை

Photo of Green gram Idli / dosa by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
865
7
5.0(0)
0

பச்சை பயறு இட்லி/ தோசை

Aug-04-2018
Wajithajasmine Raja mohamed sait
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயறு இட்லி/ தோசை செய்முறை பற்றி

பச்சை பயறில் அதிகமான அளவு லோ பேட் புரோட்டீன் உள்ளது. இது உடலுக்கு மிகவும் நல்லது.பச்சை பயறை வைத்து பல வகையான உணவுகள் சமைக்கலாம். எளிதாக பச்சை பயறு இட்லி/ தோசை செய்வதை கீழே பார்க்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை பயறு -1 கப்
  2. உளுந்து -1/2 கப்
  3. இட்லி அரிசி -3 தேக்கரண்டி
  4. உப்பு - தேவையா அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பச்சை பயறை நன்கு கழுவி 6 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
  2. உளுந்து மற்றும் இட்லி அரிசியை கழுவி 2 மணிநேரம் ஒன்றாக ஊற வைத்துக்கொள்ளவும்.
  3. மிக்சியில் உளுந்து மற்றும் அரிசியை சேர்த்து நன்கு மையாக அரைத்துக்கொள்ளவும்.
  4. பின்பு பச்சை பயறை சேர்த்து நன்கு மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் உளுந்து மற்றும் பாசிப்பயறு கலவை சேர்த்த தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்,
  6. இப்பொழுது மாவை 6 -8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  7. அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தட்டில் மாவை ஊற்றி வேக விடவும்.
  8. இப்பொழுது ஆரோக்கியமான பச்சை பயறு இட்லி தயார்.
  9. அதே மாவை சிறிதளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பத்த்திற்கு கரைத்து தோசை தவாவில் ஊற்றினால் சுவையான மொரு மொருப்பான தோசை தயார்.
  10. தக்காளி , தேங்காய் சட்னியுடன் இட்லி ,தோசையை பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்