வீடு / சமையல் குறிப்பு / நாட்டுக்கோழி குழம்பு

Photo of Country chicken curry by Surya Rajan at BetterButter
362
1
0.0(0)
0

நாட்டுக்கோழி குழம்பு

Aug-05-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நாட்டுக்கோழி குழம்பு செய்முறை பற்றி

நாட்டுக்கோழி குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நாட்டுக்கோழி 1/4 கிலோ
  2. சோம்பு அரை ஸ்பூன்
  3. சீரகம் அரை ஸ்பூன்
  4. கருவேப்பிலை சிறிதளவு
  5. கொத்தமல்லி சிறிதளவு
  6. தேங்காய்த்துருவல் 4 ஸ்பூன்
  7. பட்டை 1
  8. கிராம்பு 2
  9. ஏலக்காய் 2
  10. உப்பு தேவையான அளவு
  11. நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
  12. சின்ன வெங்காயம் 20
  13. தக்காளி ஒன்று
  14. சிவப்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  15. மல்லித் தூள் ஒரு ஸ்பூன்
  16. கரம் மசாலா அரை ஸ்பூன்
  17. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சீரகம் கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. பின் தேவையான உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  4. பின் சிவப்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  5. பின் சுத்தம் செய்த துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து விடவும்
  6. பின் தேவையான தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்
  7. தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  8. 15 நிமிடம் கழித்து அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கலந்து ஐந்து பத்து நிமிடம் குறைந்த தீயில் வேகவைக்கவும்
  9. கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்