வீடு / சமையல் குறிப்பு / தட்டாம்பயறு கத்தரிக்காய் கூட்டு

Photo of Cowpeas Brinjal Kootu by Sowmya Sundar at BetterButter
638
1
0.0(0)
0

தட்டாம்பயறு கத்தரிக்காய் கூட்டு

Aug-06-2018
Sowmya Sundar
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தட்டாம்பயறு கத்தரிக்காய் கூட்டு செய்முறை பற்றி

தட்டாமபயறு மற்றும் கத்திரிக்காய் சேர்த்து வறுத்து அரைத்த கூட்டு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தட்டாம்பயறு- 1 கப்
  2. கத்திரிக்காய்-4
  3. புளி - நெல்லிக்காய் அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  6. வறுத்து அரைக்க
  7. தேங்காய் துருவல்-1/4 கப்
  8. உளுத்தம்பருப்பு-2 டேபிள் ஸ்பூன்
  9. மிளகு-1 டீஸ்பூன்
  10. சீரகம்-1 டீஸ்பூன்
  11. மிளகாய் வற்றல்-2
  12. பெருங்காயம்- 1 துண்டு

வழிமுறைகள்

  1. தட்டாம்பயறை தண்ணீர் விட்டு எட்டு மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து வடித்து கொள்ள வேண்டும்
  2. கடாயில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். அதனுடன் புளி கரைசல்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  4. பின் வெந்த தட்டாம்பயறு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்
  5. ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து ,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்