வீடு / சமையல் குறிப்பு / அகர் அகர் புட்டிங்

Photo of agar agar pudding by Apsara Fareej at BetterButter
1317
0
0.0(0)
0

அகர் அகர் புட்டிங்

Aug-07-2018
Apsara Fareej
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

அகர் அகர் புட்டிங் செய்முறை பற்றி

இது மலேஷியாவில் மிகவும் பிரபலமான ஒன்று. செய்வது மிகவும் எளிது. உடலுக்கு மிகவும் நல்லது. வயிற்று புண்ணை ஆற்றும். சூட்டை தணிக்கும் வல்லமை கொண்டது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பான் ஆசியன்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. அகர் அகர் ஸ்டிக்(அ) பவுடர் - 6 கிராம்
  2. தண்ணீர் - 3 டம்ளர்
  3. சீனி (அ) கருப்பட்டி - 100கிராம்
  4. உப்பு - 1/4 தேக்கரண்டி
  5. திக்கான தல தேங்காய்பால் - 1/2 கப் ( 125மிலி)
  6. பாண்டன் ( ரம்பை)இலை - 1
  7. முட்டை - 1

வழிமுறைகள்

  1. முதலில் தண்ணீரில் அகர் அகரை சேர்த்து அடுப்பில் வைக்கவும். பாண்டன் இலையை நான்காக மடித்து கட்டி அதிலேயே போட்டு அகர் அகர் நன்கு கரையும் வரை கொதிக்க விடவும்.
  2. படத்தில் இருப்பதில் நான் செய்திருப்பது பாண்டன் பேஸ்ட் சேர்த்திருக்கேன். எனவே பச்சை கலரில் இருக்கின்றது. இலை போட்டால் அந்த கலர் வராது.
  3. அகர் அகர் கரந்ததும் சீனியையும், உப்பையும் சேர்த்து கரைய விடவும். சீனியை விரும்பாதவர்கள் கருப்பட்டியை சேர்க்கலாம்.
  4. அது கரைவதற்குள் ஒரு கிண்ணத்தில் முட்டை உடைத்து ஊற்றி, அதில் திக்கான தேங்காய்பாலை சேர்த்து நன்கு ஃபோர்க்கால் ஒன்று சேர அடித்து கலக்கி வைக்கவும்.
  5. சீனி கரைந்ததும் கரசலை வடிக்கட்டி விட்டு, அப்பாத்திரத்தை கழுவி விட்டு மீண்டும் அதில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
  6. கொதிக்க ஆரம்பித்ததும், கலக்கி வைத்திருக்கும் முட்டை கலவையை அதில் ஊற்றி ஃபோர்க்காலேயே நன்கு கலக்கி விட வேண்டும். அதுவும் சேர்ந்து தள தளவென்று கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பிலிருந்து இறக்கி சிறிய தாம்பல தட்டிலோ, விரும்பி அச்சு தட்டிலோ ஊற்றி ஆற விடவும்.
  7. பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று சாப்பிட்டால் மிகவும் அருமையாக, சுவையாக இருக்கும்.
  8. கருப்பட்டி சேர்த்து செய்தால் தித்திப்பு சிலருக்கு போதாது. அவர்கள் நான் சொன்ன அளவை விட கூடுதலாக கருப்பட்டியையோ, கொஞ்சம் சீனியோ சேர்த்து செய்யலாம்.கருப்பட்டி சேர்த்து செய்த அகர் அகர் புட்டிங் இந்த படத்தில் உள்ளது போன்றே இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்