வீடு / சமையல் குறிப்பு / கொண்டைகடலை சால்னா

Photo of Sanna masala curry by Najima Afsheen at BetterButter
441
0
0.0(0)
0

கொண்டைகடலை சால்னா

Aug-07-2018
Najima Afsheen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொண்டைகடலை சால்னா செய்முறை பற்றி

இது பரோட்டா,சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையான

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெ.கொண்டை கடலை-1 கப்(ஊற வைத்தது)
  2. வெங்காயம் -1 கப்
  3. தக்காளி-2
  4. ப.மிளகாய் -1
  5. இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன்
  6. மிளகாய் தூள்-1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  8. கறிமசாலா-1 ஸ்பூன்
  9. தனியா தூள்-1 ஸ்பூன்
  10. உப்பு-தேவைக்கு
  11. எண்ணெய்-2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை வேக வைக்கவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. வதங்கியதும் தக்காளியை சேர்க்கவும்
  4. தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்
  5. பின்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  6. சிறிது வேக வைத்த கடலையை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும்
  7. மிளகாய்த்தூள் வதங்கியதும் வேக வைத்த கொண்டைக் கடலையை சேர்த்து கிளறவும்
  8. இதோடு மஞ்சள் தூள் கறி மசாலா தூள் கொத்தமல்லி தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  9. நன்கு கொதித்ததும் வேக வைத்த கடலை பேஸ்ட்டை இதோடு கலந்து விடவும்
  10. ஐந்து நிமிடத்தில் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்