வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயறு தோசை

Photo of Green gram dosa by Rachell Revathi Samuel at BetterButter
226
1
0.0(0)
0

பச்சை பயறு தோசை

Aug-08-2018
Rachell Revathi Samuel
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயறு தோசை செய்முறை பற்றி

புரத சத்து மிகுந்த பச்சை பயறு வைத்து எளிதாக செய்யக்கூடிய தோசை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை பயறு 1/2 கப்
  2. பச்சை மிளகாய் 3
  3. இஞ்சி 1 துண்டு
  4. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சை பயிற்றை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் பச்சை பயறு பச்சை மிளகாய் இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.தண்ணீர் அதிகம் ஊற்றினால் தோசை வராது.
  4. மாவை பாத்திரத்தில் மாற்றி விட்டு அடுப்பில் தோசை கல்லை வைத்து சிறிது எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.
  5. இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
  6. சுவையான ஆரோக்கியமான மொரு மொரு பச்சை பயறு தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்