வீடு / சமையல் குறிப்பு / ஃப்ளோட்டிங் ஐலண்ட் (மிதக்கும் தீவு)

Photo of Floating Island by Raihanathus Sahdhiyya at BetterButter
0
3
0(0)
0

ஃப்ளோட்டிங் ஐலண்ட் (மிதக்கும் தீவு)

Aug-08-2018
Raihanathus Sahdhiyya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஃப்ளோட்டிங் ஐலண்ட் (மிதக்கும் தீவு) செய்முறை பற்றி

ஃப்ளோட்டிங் ஐலண்ட் என்பது பிரான்ஸின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று. மிகவு‌ம் சுவையான இந்த இனிப்பை எளிதாகவும் சில பொருட்களை கொண்டு சத்தான வகையில் செய்திடலாம்.. முட்டை மற்றும் பால் இரண்டு தான் இதன் முக்கிய பொருட்கள்.. இரண்டுமே புரதம் நிறைந்தவை.. உடல் வளர்ச்சிக்கு தேவையான முழுமையான புரதமான ஆல்புமின் மற்றும் கேசின் இரண்டுமே முட்டை மற்றும் பாலில் உள்ளது. முட்டையில் மட்டும் பத்துக்கும் அதிகமான புரதம் உள்ளது!! இதோ இப்பொழுது ஃப்ளோட்டிங் ஐலாண்ட் செய்முறை உங்களுக்காக...

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • తేలికైనవి
 • పండుగలాగా
 • ఫ్రెంచి
 • చిలకడం
 • ఉడికించాలి
 • ఆవిరికి
 • చల్లగా చేసుకోవటం
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. முட்டை: 2
 2. பால் : 2 கப் (1/2 லிட்டர்)
 3. சர்க்கரை : 4 மேசைக்கரண்டி
 4. உப்பு : 1 சிட்டிகை (அ) லெமன் ஜூஸ் : 2 சொட்டு
 5. வென்னிலா எசன்ஸ் : 1 தேக்கரண்டி
 6. மில்க் மெய்ட் : 1/4 கப்
 7. காரமல் மிட்டாய் செய்ய
 8. சர்க்கரை : 1/2 கப்
 9. தண்ணீர் : 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

 1. முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனி தனியே எடுக்கவும்.
 2. ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் பால் ஊற்றி காய்ச்சவும்.
 3. மெரிங் செய்ய, ஒரு வட்டமான கிண்ணத்தில் முட்டை வெள்ளை கருவை சேர்த்து சிட்டிகை உப்பு சேர்த்து முட்டை அடிக்கும் எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும்.. இடையிடையே 3 மேசைக்கரண்டி சர்க்கரையை சேர்த்து நன்றாக இரண்டு மடங்காக வரும் வரை அடிக்கவும். (Stiff peaks எனப்படும் தலை கீழாக கவிழ்த்தாலும் முட்டை கீழே விழா வண்ணம் இருக்கும் வரை அடித்து கொள்ளவும்). மிகவு‌ம் அதிக நேரம் முட்டையை அடித்தால் நீர்த்து விடும்.
 4. இப்போது இரண்டு ஸ்பூன் கொண்டு அடித்து வைத்துள்ள மெரிங்கை எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுமார் 30 வினாடிகள் வரை வேக விடவும். (இரு பக்கங்களும் திருப்பி வேக விடவும்). சிறிது அதிகமான நேரம் வெந்தாலும் முட்டை அமுங்கி விடும். எனவே கவனம் தேவை.
 5. வேக வைத்த இந்த மெரிங்கை ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
 6. இடையே ஒரு பாத்திரத்தில் முட்டை மஞ்சள் கருவில் 2 மேசைக்கரண்டி சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் மற்றும் 1/2 கப் பால் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் இருக்கும் பாலில் ஊற்றவும்.
 7. இந்த கஸ்டர்ட் கலவை திக்கான உடனே அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். பிறகு அதை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்விக்கவும்
 8. இப்போது ஒரு பாத்திரத்தில் 1/2 கப் சர்க்கரை மற்றும் 1 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக பொன்நிறமாக வரும் வரை காய்ச்சி இறக்கவும்
 9. ஒரு பட்டர் பேப்பரில் இந்த காரமலை ஒரு ஸ்பூன் கொண்டு ஊற்றவும்
 10. ஆறிய பின் விருப்பமான அளவில் உடைத்து கொள்ளவும்
 11. பரிமாறும் பொழுது கஸ்டர்ட் கலவை ஊற்றி அதன் மீது மெரிங் வைத்து காரமல் மிட்டாய் கொண்டு அலங்கரிக்கவும்.
 12. இதோ சுவையான சத்தான மிதக்கும் தீவு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்