வீடு / சமையல் குறிப்பு / புரோட்டின் நிறைந்த மதிய விருந்து

Photo of Hi Protein Lunch Feast by Jayasakthi Ekambaram at BetterButter
484
1
0.0(0)
0

புரோட்டின் நிறைந்த மதிய விருந்து

Aug-11-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புரோட்டின் நிறைந்த மதிய விருந்து செய்முறை பற்றி

புரதம் நிறைந்த தாளித்த துவரம் பருப்பு, பயித்தம் பருப்பு பாயசம், மொச்சை கத்திரிக்காய் காரக்குழம்பு, சோயா மஞ்சூரியன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோயா மஞ்சூரியனுக்கு தேவையானவை
  2. சோயா 200 கிராம்
  3. குடை மிளகாய் 1
  4. வெங்காயத்தாள் ஒரு கட்டு
  5. பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன்
  6. பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன்
  7. சோயா சாஸ் 2 டீஸ்பூன்
  8. தக்காளி சாஸ் ஒரு டீஸ்பூன்
  9. சில்லி சாஸ் ஒரு ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் முக்கால் ஸ்பூன்
  11. உப்புத்தூள் ஒரு ஸ்பூன்
  12. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  13. சர்க்கரை ஒரு ஸ்பூன்
  14. மைதா மாவு 2 ஸ்பூன்
  15. சோள மாவு 2 டீஸ்பூன்
  16. பருப்பு பாயசத்துக்கு தேவையானவை
  17. பயித்தம் பருப்பு நூறு கிராம்
  18. பொடியாக நறுக்கிய பாகு வெல்லம் 200 கிராம்
  19. ஏலக்காய் தூள் ஒரு ஸ்பூன்
  20. முந்திரி 8
  21. நெய் ஒரு ஸ்பூன்
  22. பால் 200 மில்லி
  23. தண்ணீர் 400 மில்லி
  24. தேங்காய் கால் மூடி
  25. மொச்சைக் கத்தரிக்காய் காரக்குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்
  26. சின்ன வெங்காயம் 10
  27. தக்காளி-2
  28. புளி எலுமிச்சை அளவு
  29. காய்ந்த மொச்சை 150 கிராம்
  30. குழம்பு மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  31. கத்திரிக்காய் 3
  32. கடுகு ஒரு ஸ்பூன்
  33. சீரகம் அரை ஸ்பூன்
  34. வெந்தயம் கால் டீஸ்பூன்
  35. நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
  36. கறிவேப்பிலை ஒரு கொத்து
  37. உப்பு ஒரு ஸ்பூன்
  38. தாளித்த பருப்பு செய்வதற்கு
  39. துவரம் பருப்பு 150 கிராம்
  40. சின்ன வெங்காயம் 8
  41. காய்ந்த மிளகாய் ஒன்று
  42. நெய் ஒரு ஸ்பூன்
  43. நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன்
  44. கடுகு ஒரு ஸ்பூன்
  45. பெருங்காயத் தூள் அரை ஸ்பூன்
  46. கறிவேப்பிலை ஒரு கொத்து
  47. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சோயாவை பத்து நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு வைக்கவும்
  2. சுடு தண்ணீரை வடிகட்டி குளிர்ந்த நீரை ஊற்றவும்
  3. தண்ணீரை சுத்தமாக பிழிந்து எடுக்கவும்
  4. பிழிந்து வைத்த சோயாவில் மைதா மாவு மிளகாய் தூள் மிளகு தூள் உப்பு தூள் சோயா சாஸ் இஞ்சி பூண்டு விழுது கலந்து பிசிறி வைக்கவும்
  5. இதை 10 நிமிடம் ஊறவைக்கவும்
  6. பிறகு சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  7. ஒரு சிறிய கிண்ணத்தில் தக்காளி சாஸ் சோயா சாஸ் சில்லி சாஸ் மிளகுத்தூள் உப்பு வினிகர் சர்க்கரை ஆகியவற்றை கலந்து கொள்ளவும்
  8. அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்
  9. வெங்காயத்தாளில் உள்ள வெங்காயத்தை பொடியாக அரிந்து எண்ணெயில் போட்டு வதக்கவும்
  10. பிறகு பொடியாக அரிந்த பூண்டு இஞ்சியை போட்டு வதக்கவும்
  11. நீளவாக்கில் நறுக்கிய குடை மிளகாயை வதக்கவும்.
  12. கலந்து வைத்துள்ள சாஸ் கலவையை ஊற்றி திரும்பவும் வதக்கவும்
  13. சோள மாவை தண்ணீரில் கரைத்து அதையும் ஊற்றவும்
  14. அது கெட்டியாக ஆனதும் வறுத்து வைத்த சோயாவை போட்டு நன்றாக கிளறவும்
  15. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி மேலே வெங்காயத்தாளை தூவவும்
  16. பயத்தம் பருப்பு பாயாசத்திற்கு முதலில் பயத்தம் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்
  17. தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்
  18. பருப்பை கழுவி தண்ணீருடன் பால் சேர்த்து வேக வைக்கவும்
  19. அது வெந்த பிறகு வெல்லத்தை காய்ச்சி வடிகட்டி அதில் ஊற்றவும்
  20. தேங்காயில் ஏலக்காய்த்தூளைப் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  21. இந்த தேங்காய் கலவையையும் பாயசத்தில் ஊற்றவும்
  22. நன்றாக கொதிக்கவைத்து அடுப்பை ஆப் செய்யவும்
  23. நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து மேலே தூவவும்
  24. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்
  25. காரக்குழம்பு செய்வதற்கு
  26. மொச்சையை 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  27. ஊறிய மொச்சையை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
  28. கத்திரிக்காயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  29. வெங்காயம் தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்
  30. அடுப்பில் வாணலியை வைத்து கடுகு சீரகம் வெந்தயம் தாளிக்கவும்
  31. அது பொரிந்ததும் வெங்காயத்தை போடவும்
  32. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை போட்டு வதக்கவும்
  33. தக்காளி வதங்கியதும் கத்திரிக்காய் போட்டு வதக்கவும்
  34. கத்தரிக்காயை மூடி போட்டு 5 நிமிடம் சிறிய தீயில் வைத்து வதக்கவும்
  35. புளிக்கரைசலை ஊற்றவும்
  36. மிளகாய்த்தூள் உப்பையும் போடவும்
  37. வெந்த மொச்சையை கொட்டவும்
  38. மூடி போட்டு சிறிய தீயில் வேக வைக்கவும்
  39. காய் வெந்ததும் குழம்பும் கெட்டி பதம் வந்த உடன் அடுப்பை ஆப் செய்யவும்
  40. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்
  41. தாளித்த பருப்பு செய்வதற்கு முதலில் துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
  42. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்
  43. பிறகு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
  44. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்
  45. பெருங்காயத் தூளை சேர்த்து வதக்கவும்.
  46. மஞ்சள் தூள் அரை ஸ்பூன் போடவும்
  47. எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு வெந்த பருப்பை அதில் போடவும்
  48. நன்றாக கலக்கி பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்