வீடு / சமையல் குறிப்பு / ஈசி சின்ன வெங்காய சாம்பார்

Photo of Easy Shallots Sambar by Jayasakthi Ekambaram at BetterButter
476
0
0.0(0)
0

ஈசி சின்ன வெங்காய சாம்பார்

Aug-12-2018
Jayasakthi Ekambaram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈசி சின்ன வெங்காய சாம்பார் செய்முறை பற்றி

துவரம் பருப்பில் சின்ன வெங்காயம் போட்டு செய்யும் சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு நூறு கிராம்
  2. சின்ன வெங்காயம் 10
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய் 1
  5. காய்ந்த மிளகாய் ஒன்று
  6. கருவேப்பிலை ஒரு கொத்து
  7. கடுகு ஒரு ஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  9. தூள் பெருங்காயம் அரை ஸ்பூன்
  10. கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு
  11. புளி சிறிய எலுமிச்சை அளவு
  12. உப்பு ஒரு ஸ்பூன்
  13. எண்ணெய் 3ஸ்பூன்
  14. தண்ணீர் 300ml
  15. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடுப்பின் ஒரு பர்னரில் ஒரு குக்கரை வைத்து துவரம் பருப்பை கழுவி அதில் போடவும்
  2. அதில் தண்ணீரும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவும்
  3. வெங்காயம் தக்காளி கொத்தமல்லி அனைத்தையும் பொடியாக அரியவும்
  4. இன்னொரு பர்னரில் ஒரு வாணலியை வைக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்
  6. வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  7. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்
  8. பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்
  9. பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும்
  10. வதக்கிய வெங்காயம் தக்காளியை குக்கரில் உள்ள பருப்பில் சேர்க்கவும்
  11. குக்கரை மூடி வேக விடவும்
  12. பத்து நிமிடம் வேகவிட்டு அடுப்பை ஆப் செய்யவும்
  13. குக்கரில் ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறந்து புளிக்கரைசலை ஊற்றவும்
  14. உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு கொத்தமல்லித் தழை தூவவும்
  15. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்