வீடு / சமையல் குறிப்பு / பச்சை மொச்சை சிக்கன் கிரேவி

Photo of Green motchai chicken gravy by hajirasheed haroon at BetterButter
455
1
0.0(0)
0

பச்சை மொச்சை சிக்கன் கிரேவி

Aug-13-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பச்சை மொச்சை சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

பச்சை மொச்சை சிக்கன் சேர்த்து செய்துள்ளது புரோட்டின் சத்து நிறைந்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் அரை கிலோ
  2. பச்சை மொச்சை ஒரு கப்
  3. வெங்காயம் 4
  4. தக்காளி-2
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  10. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
  11. தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு சீரகம்
  14. மல்லி இலை சிறிதளவு
  15. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் பச்சை மொச்சையை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை ஏலக்காய் கிராம்பு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சிக்கன் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்
  5. பிறகு அதில் உரித்த மொச்சை மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறவும் சிறிது தண்ணீர் சேர்த்து 2 விசில் வேக வைக்கவும்
  6. இரண்டு விசில் வந்தவுடன் பெப்பர் தூள் தூவி பரிமாறலாம்
  7. சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
  8. சுவையான ஈஸியான மொச்சை சிக்கன் கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்