வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பனீர் சாண்ட்விச்

Photo of Vegetable Paneer Sandwich by Jayasakthi Ekambaram at BetterButter
218
0
0.0(0)
0

வெஜிடபிள் பனீர் சாண்ட்விச்

Aug-14-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பனீர் சாண்ட்விச் செய்முறை பற்றி

பிரட்டுக்கு நடுவில் காய்கறிகளும் பனீரும் சேர்த்து செய்யும் சாண்ட்விச்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரெட் ஸ்லைஸ்கள் 12
  2. பனீர் 150 கிராம்
  3. கேரட் ஒன்று
  4. குடைமிளகாய் ஒன்று
  5. வெங்காயம் ஒன்று
  6. தக்காளி ஒன்று
  7. பச்சை மிளகாய் ஒன்று
  8. பூண்டு ஐந்து பற்கள்
  9. கொத்து மல்லி தழை அரை கைப்பிடி அளவு
  10. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  11. மிளகுத்தூள் அரைஸ்பூன்
  12. சீரகத்தூள் அரை ஸ்பூன்
  13. கரம் மசாலா அரை ஸ்பூன்
  14. உப்பு தூள் அரை ஸ்பூன்
  15. எண்ணெய் 2 ஸ்பூன்
  16. வெண்ணெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் கேரட் தக்காளி பச்சை மிளகாய் பொடியாக அரிந்து கொள்ளவும்
  2. பனீரை துருவி வைத்துக் கொள்ளவும்
  3. கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. குடை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், வெண்ணெயை ஊற்றவும்
  6. எண்ணெய் காய்ந்ததும் பூண்டு பற்களைப் போட்டு வதக்கவும்
  7. வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  8. வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் தக்காளியைப் போட்டு வதக்கவும்
  9. குடைமிளகாயை போட்டு வதக்கவும்
  10. மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் உப்பு தூள் போட்டு வதக்கவும்
  11. எல்லாவற்றையும் நன்றாக கலக்கி கொத்தமல்லி தழை தூவவும்
  12. அடுப்பை ஆஃப் செய்து ஆற வைக்கவும்
  13. இந்த காய்கறி பனீர் மசாலாவை இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவில் வைத்து சாண்ட்விச் மேக்கரில் வைத்து பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்