வீடு / சமையல் குறிப்பு / கீமா மட்டர்

Photo of KHEEMA mutter by Subashini Krish at BetterButter
235
0
0.0(0)
0

கீமா மட்டர்

Aug-14-2018
Subashini Krish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீமா மட்டர் செய்முறை பற்றி

கொத்து கறியும் பச்சை பட்டாணியும் சேர்த்து செய்யப்படும் இந்த புரத சத்து நிறைந்த உணவு பூரி சப்பாத்திக்கு மிகவும் ஏற்றதாகும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் கொத்துக்கறி கால் கிலோ
  2. பச்சை பட்டாணி 200 கிராம்
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. பழுத்த தக்காளி ஒன்று
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
  6. வர மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  7. உப்பு ஒரு தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  9. கரம் மசாலா தூள் அரை தேக்கரண்டி
  10. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  11. கொத்தமல்லி தழை அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. கொத்துக்கறியை உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து 5 விசில் வரும் வரை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பச்சை பட்டாணியையும் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் உப்பு மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி விழுது ,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  5. பின் வேக வைத்த கொத்துக்கறியை சேர்த்து கிளறவும்
  6. நன்கு வதங்கிய பின் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும்
  7. குறைந்த தீயில் எண்ணெய் வெளியே வரும் வரை வேக விடவும்
  8. இறுதியாக கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்
  9. நான் சூடான புசுபுசு பூரிகளுடன் பரிமாறினேன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்