வீடு / சமையல் குறிப்பு / கறிவேப்பிலை சாதம்

Photo of curry leaves rice by Deepa Srivatsan at BetterButter
176
1
0.0(0)
0

கறிவேப்பிலை சாதம்

Aug-17-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கறிவேப்பிலை சாதம் செய்முறை பற்றி

சாதத்தில் கருவேப்பிலை சேர்த்து இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 2 கப் உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்
  2. கருவேப்பிலை 1 1/2;கப்
  3. உளுத்தம் பருப்பு ஒரு கரண்டி
  4. மிளகு ஒரு ஸ்பூன்
  5. மிளகாய்வற்றல் 2
  6. பெருங்காயம் சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 1 1/2 கரண்டி
  9. கடுகு அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு மிளகு மிளகாய் வற்றல் பெருங்காயம் ஆகியவற்றை தனியாக வறுக்கவும்.
  2. வறுத்ததை சிறிது உப்பு சேர்த்து மிக்சியில் தனியாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
  3. கறிவேப்பிலையை நன்றாக அலசி நிழலில் தண்ணீர் இல்லாமல் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  4. வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்த கருவேப்பிலை போட்டு நன்றாக பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  5. கருவேப்பிலை ஆறியபின் அதை நன்றாக கையில் பொடித்து வைத்துக் கொள்ளவும்
  6. அதன் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு அதை வெடித்த பின் ஆறிய சாதத்தை அதன் மீது போடவும்
  7. பின்பு பொடித்த கருவேப்பிலை தனியாக வறுத்து வைத்துள்ள பொடி உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்