வீடு / சமையல் குறிப்பு / புரோடீன் ரிச் கொண்டக்கடலை வேர்க்கடலை கிரிஸ்பி பால்ஸ் , கொண்டக்கடலை சாதம்

Photo of Protein rich kondakadalai peanut crispy balls by poorani Kasiraj at BetterButter
485
1
0.0(0)
0

புரோடீன் ரிச் கொண்டக்கடலை வேர்க்கடலை கிரிஸ்பி பால்ஸ் , கொண்டக்கடலை சாதம்

Aug-18-2018
poorani Kasiraj
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புரோடீன் ரிச் கொண்டக்கடலை வேர்க்கடலை கிரிஸ்பி பால்ஸ் , கொண்டக்கடலை சாதம் செய்முறை பற்றி

புரோடீன் ரிச் கொண்டக்கடலை வேர்க்கடலை பொரிகடலை கிரிஸ்பி பால்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொண்டக்கடலை 1/2 டம்ளர்
  2. வேர்க்கடலை 1/4 கப்
  3. பொரிகடலை 1/4 கப்
  4. சீரகம் 1/2 ஸ்பூன்
  5. சோம்பு 1/2 ஸ்பூன்
  6. உப்பு
  7. கறிவேப்பில்லை
  8. வெங்காயம் 1
  9. பச்சை மிளகாய் 1
  10. காயம் 1/6 ஸ்பூன்
  11. கொண்டக்கடலை சாதம்:
  12. வெங்காயம் 1
  13. தக்காளி 2
  14. உப்பு
  15. கடுகு
  16. கறிவேப்பில்லை
  17. குழம்பு மசாலா 1/2 ஸ்பூன்
  18. சாதம் 1 கப்
  19. கொண்டக்கடலை 1/4 கப்
  20. பூண்டு
  21. புளிக்கரைசல் 2 ஸ்பூன் திக்க்கானது

வழிமுறைகள்

  1. கொண்டைக் கடலையை நன்கு 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறிய கொண்டைக்கடலையை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்
  3. கொரகொரப்பாக வேர்கடலை பொருளையும் அரைத்துக் கொள்ளவும்
  4. அதனுடன் உப்பு சீரகம் பெருஞ்சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  5. மாவுடன் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  6. ஒரு கடாயில் எண்ணை ஊற்றி நன்கு சூடாகக்கவும்
  7. சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  8. புரோட்டீன் ரிச் கொண்டை கடலை வேர்க்கடலை கிறிஸ்பி பால்ஸ் ரெடி
  9. கொண்டைக்கடலை சாதம் செய்வதற்கு
  10. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளிக்கவும்
  11. வெங்காயத்தை சேர்க்கவும்
  12. வெங்காயம் வதங்கியவுடன் பூண்டு சேர்க்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும்
  13. தக்காளி வதங்கிய பின் குழம்பு மசாலா சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக விடவும்
  14. வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து கொள்ளவும்
  15. ரெண்டு ஸ்பூன் புளிக்கரைசல் சேர்த்துக் கொள்ளவும்
  16. கொத்தமல்லி தூவி பரிமாறினால் கொண்டைக்கடலை சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்