Photo of Sothi meal by Surya Rajan at BetterButter
548
0
0.0(0)
0

சொதி மீல்

Aug-20-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சொதி மீல் செய்முறை பற்றி

இது ஒரு சுவையான லட்டு ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சொதி செய்வதற்கு
  2. கேரட், உருளைக்கிழங்கு 1
  3. பீன்ஸ் 5
  4. இஞ்சி துருவியது அரை ஸ்பூன்
  5. தேங்காய்ப்பால் ஒரு கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. மஞ்சள் தூள் சிறிதளவு
  8. சீரக அரை ஸ்பூன்
  9. மிளகாய் ஒன்று
  10. தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
  11. பாசிப்பருப்பு அரை கப்
  12. கடுகு அரைஸ்பூன்
  13. சௌசௌ கூட்டு செய்வதற்கு
  14. பாசி பருப்பு ஒரு கையளவு
  15. கடுகு அரை ஸ்பூன்
  16. சீரகம் அரை ஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு
  18. மஞ்சள் தூள் சிறிதளவு
  19. வெங்காயம் ஒன்று
  20. அரைக்க
  21. தேங்காய் துருவல் 3 ஸ்பூன்
  22. மிளகாய் ஒன்று
  23. இஞ்சி துவையல் செய்வதற்கு
  24. இஞ்சி 50 கிராம்
  25. உப்பு தேவையான அளவு
  26. வெல்லம் சிறிதளவு
  27. மிளகாய் ஒன்று
  28. உளுந்து ஒரு ஸ்பூன்
  29. தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்
  30. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
  31. கடுகு அரை ஸ்பூன்
  32. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. சொதி செய்வதற்கு
  2. பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் உப்பு ,நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  5. பின் துருவிய இஞ்சி மஞ்சள் தூள் அரைத்து வைத்துள்ள சீரகம் மற்றும் மிளகாயை சேர்க்கவும்
  6. பின் வேக வைத்துள்ள பருப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடவும்
  7. பின் தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்
  8. சௌசௌ கூட்டு செய்வதற்கு
  9. சௌசௌ மட்டும் பாசிப்பருப்பினை பிரஷர் குக்கரில் 3 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  10. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
  11. பின் வேக வைத்துள்ள சாம்சங் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  12. அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி ஒரு நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்
  13. இஞ்சி துவையல் செய்வதற்கு
  14. இஞ்சியின் தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும்
  15. கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்
  16. அதே எண்ணெயில் நறுக்கிய இஞ்சி சிவப்பு மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி தனியே எடுத்து வைக்கவும்
  17. இந்த எண்ணையில் கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்
  18. பின் வறுத்த உளுத்தம் பருப்பு, இஞ்சி சிவப்பு மிளகாய் உடன் வெல்லம் உப்பு தேங்காய் துருவல் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  19. தேவையெனில் சிறிதளவு புளித் தண்ணீர் சேர்க்கலாம்
  20. பின் தாளிப்பனை சேர்த்துக் கலந்து பரிமாறவும்
  21. சாதம் சௌசௌ கூட்டு சொதி குழம்பு சப்பாத்தி தயிர் அப்பளத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்