வீடு / சமையல் குறிப்பு / பரோட்டா மற்றும் காளான் குழம்பு

Photo of Parotta & mushroom kulambu by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
656
2
0.0(0)
0

பரோட்டா மற்றும் காளான் குழம்பு

Aug-25-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரோட்டா மற்றும் காளான் குழம்பு செய்முறை பற்றி

மைதா மாவினால் செய்யப்படும் பரோட்டா

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரோட்டாவிற்கு தேவையான பொருட்கள் மைதா மூன்று கப்
  2. முட்டை ஒன்று
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. காளான் குழம்பு தேவையான பொருட்கள் காளான் ஒரு பாக்கெட்
  6. வெங்காயம் ஒன்று
  7. காய்ந்த மிளகாய் மூன்று
  8. கறிவேப்பிலை சிறிது
  9. பட்டை ஒன்று
  10. கிராம்பு ஒன்று
  11. இஞ்சி சிறு துண்டு
  12. பூண்டு 5 பல்
  13. மஞ்சள் தூள் சிறிது
  14. மிளகாய்த்தூள் காரத்துக்கேற்ப
  15. மட்டன் மசாலா தூள் 2 டீஸ்பூன்
  16. மல்லித்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு
  18. தக்காளி இரண்டு பழம்
  19. எண்ணெய் தேவையான அளவு
  20. சோம்பு கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. 3 கப் மைதா மாவில் உப்பு ஒரு முட்டை தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்
  2. பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்
  3. ஊறிய மாவை சப்பாத்தி கட்டையால் நீளவாக்கில் தேய்க்கவும்
  4. அதன் மேல் நெய் தடவி மைதா மாவை தூவவும்
  5. பின் அதை ஒரு ஓரமாக மடித்து சுருட்டவும்
  6. சுருட்டிய மாவை தனியே வைக்கவும்
  7. எல்லா மாவையும் ஒன்று போல சுருட்டி 15 நிமிடம் ஊற விடவும்
  8. ஊறிய மாவை ஒன்றை எடுத்து திரட்டி தவாவில் சுட்டு எடுக்கவும்
  9. நன்றாக இரு புறமும் வேக விட்டு எடுக்கவும்
  10. குழம்பு செய்வதற்கு கடாயில் வெங்காயம் பட்டை கிராம்பு இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாய் சோம்பு கறிவேப்பிலை சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்
  11. வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் மட்டன் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
  12. வதக்கிய கலவையை ஆறவிட்டு மிக்ஸியில் அரைக்கவும்
  13. குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் கறிவேப்பிலை தக்காளி சேர்த்து வதக்கவும்
  14. இதனுடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்
  15. காளான் வெந்ததும் அரைத்த மசாலா தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  16. குக்கர் மூடியைப் போட்டு இரண்டு விசில் வைத்து எடுக்கவும் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்