வீடு / சமையல் குறிப்பு / சாம்பார் சாதம், காலிஃப்ளவர் வறுவல்

Photo of Sambar sadham, califlower varuval by poorani Kasiraj at BetterButter
410
1
0.0(0)
0

சாம்பார் சாதம், காலிஃப்ளவர் வறுவல்

Aug-28-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் சாதம், காலிஃப்ளவர் வறுவல் செய்முறை பற்றி

காய்கறி சாம்பார் சாதத்துடன் காலிபிளவர் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • மகாராஷ்டிரம்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு நூறு கிராம்
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-2
  4. கேரட் ஒன்று
  5. பீன்ஸ் நாலு
  6. முருங்கைக்காய் 1
  7. உருளைக்கிழங்கு ஒன்று
  8. கருவேப்பிலை ஒரு கொத்து
  9. சீரகம் அரை ஸ்பூன்
  10. பூண்டு 4 பல்
  11. காயம் ஒரு சிட்டிகை
  12. தாளிப்பு வடகம்
  13. தாளிப்பதற்கு தேவையான எண்ணெய்
  14. குழம்பு மசாலா தூள் ஒரு ஸ்பூன்
  15. கடுகு சிறிது
  16. சாதம் ஒரு கப்
  17. காலிபிளவர் பூ ஒன்று
  18. மஞ்சள் தூள் சிறிது
  19. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  20. உப்பு தேவையான அளவு
  21. எண்ணெய் தேவையான அளவு
  22. அரிசி மாவு 2 டீஸ்பூன்
  23. சீரகத்தூள் மிளகுத்தூள் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் பருப்புடன் சீரகம் பூண்டு சேர்த்து வேக விடவும்
  2. ஒரு கடாயில் காய்கறிகளைப் போட்டு நன்கு வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. உப்பும் குழம்பு மசாலாவை சேர்க்கவும்
  5. வேக வைத்த பருப்பை சேர்க்கவும்
  6. தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
  7. நன்கு கொதிக்க விடவும்
  8. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்
  9. தாளிப்பை குழம்புடன் சேர்க்கவும்
  10. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன் இரண்டு கரண்டி குழம்பு சேர்க்கவும்
  11. சாதம் சேர்த்து கிளறவும்
  12. சாம்பார் சாதம் ரெடி
  13. காலிஃப்ளவரை சிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும்
  14. சிறிது தண்ணீரில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு அதில் பூவை போட்டு எடுத்து வைக்கவும்
  15. பூவுடன் சிறிது எண்ணை ஊற்றி உப்பு மஞ்சள்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் அரிசி மாவு வெல்லம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  16. கடாயில் என்னை ஊற்றி பூக்களை போட்டு வறுத்தெடுக்கவும்
  17. காலிஃப்ளவர் வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்