வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி சாதம்

Photo of Coriander leaf rice by Rachell Revathi Samuel at BetterButter
283
1
0.0(0)
0

கொத்தமல்லி சாதம்

Aug-28-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி சாதம் செய்முறை பற்றி

கொத்தமல்லி தழையை சேர்த்து செய்யப்படும் சாதம். சத்தான டிபன் பாக்ஸ் ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொத்தமல்லி தழை 1 கட்டு
  2. பச்சை மிளகாய் 2
  3. சாதம் 1 கப்
  4. எண்ணெய் 2 ஸ்பூன்
  5. கடுகு உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  6. பிரியாணி இலை 1
  7. பட்டை 1
  8. கிராம்பு 1
  9. மிளகாய் வற்றல் 1
  10. கடலைப்பருப்பு 1 ஸ்பூன்
  11. முந்திரி பருப்பு 10
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து எடுக்கவும்.கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  2. அரைத்த கொத்தமல்லி
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்க்கவும்.
  4. கடுகு வெடித்ததும் பிரியாணி இலை பட்டை கிராம்பு மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
  5. உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.
  6. பருப்புகள் வதங்கியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த மல்லித்தழையை சேர்த்து வதக்கவும்.
  8. நன்றாக கெட்டியாக வரும் வரை வதக்கவும் . தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  9. சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
  10. சுவையான ஆரோக்கியமான கொத்தமல்லி சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்