வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சாண்ட்விச்

Photo of Potato Sandwich by Rachell Revathi Samuel at BetterButter
173
1
0.0(0)
0

உருளைக்கிழங்கு சாண்ட்விச்

Aug-28-2018
Rachell Revathi Samuel
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சாண்ட்விச் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கை ஸ்டவ் செய்து செய்யப்படும் சாண்ட்விச்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பிரட் 4
  2. உருளைக்கிழங்கு 1
  3. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  4. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  5. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. தக்காளி சாஸ் 5 ஸ்பூன்
  8. வெண்ணெய் 5

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொண்டு அதில் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
  3. தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்.
  4. இரண்டு பிரட் துண்டுகளை எடுத்து அதில் தக்காளி சாஸ் தடவிக் கொள்ளவும்.
  5. உருளைக்கிழங்கை பிரட்டில் பரப்பி விடவும்.
  6. உருளைக்கிழங்கு மசாலா வைத்த பிரட்டின் மேல் அடுத்த பிரட்டை வைத்து மூடி அமுக்கி விடவும்.வெளியே உள்ள இரு புறமும் வெண்ணெய் தடவி வைக்கவும்.
  7. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து அதில் இந்த பிரட்டை டோஸ்ட் செய்யவும்.
  8. இரு புறமும் பொன்னிறமாக வரும் வரை டோஸ்ட் செய்யவும்.
  9. சுவையான உருளைக்கிழங்கு சாண்ட்விச் தயார்.
  10. லன்ச் பாக்ஸில் கொடுத்து விடக் கூடிய எளிதாக செய்யக்கூடிய லன்ச்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்