வீடு / சமையல் குறிப்பு / முட்டை கொத்து சப்பாத்தி

Photo of Egg kothu chapathi by Rachell Revathi Samuel at BetterButter
377
1
0.0(0)
0

முட்டை கொத்து சப்பாத்தி

Aug-28-2018
Rachell Revathi Samuel
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை பற்றி

சப்பாத்தியை வைத்து வித்தியாசமாக செய்யக்கூடிய உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சப்பாத்தி செய்ய: கோதுமை மாவு 1/2 கப்
  2. எண்ணெய் 1 ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. முட்டை கொத்து சப்பாத்தி செய்ய: எண்ணெய் 3 ஸ்பூன்
  5. கடுகு 1/2 ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் 1
  7. வெங்காயம் 1
  8. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  9. தக்காளி 1
  10. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  11. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  12. முட்டை 2
  13. மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பின் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  2. பிசைந்த மாவை எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  3. 20 நிமிடங்களுக்கு பிறகு மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் தேய்த்து கொள்ளவும் .
  4. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சப்பாத்தியை இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  5. வெந்த சப்பாத்தியை தட்டில் வைத்து கொள்ளவும்.
  6. சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  7. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  8. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  9. இஞ்சி பூண்டு விழுது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  10. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
  11. தக்காளி நன்றாக வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றவும்.
  12. முட்டைக்கு தேவையான உப்பு மிளகு சீரகத்தூள் சேர்க்கவும்.
  13. முட்டையை நன்றாக கிளறவும்.
  14. முட்டை வெந்ததும் சப்பாத்தி துண்டுகளை சேர்த்து வதக்கவும்
  15. 2 நிமிடங்கள் நன்றாக வதக்கி இறக்கவும்.
  16. சுவையான முட்டை கொத்து சப்பாத்தி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்