Photo of Kushka by Rachell Revathi Samuel at BetterButter
602
1
0.0(0)
0

குஸ்கா

Aug-28-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குஸ்கா செய்முறை பற்றி

எந்த காய்கறிகளும் சேர்க்காமல் செய்யப்படும் வெரைட்டி ரைஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நெய் 3 ஸ்பூன்
  2. எண்ணெய் 2 ஸ்பூன்
  3. பட்டை 1
  4. கிராம்பு 2
  5. ஏலக்காய் 1
  6. அன்னாசி பூ 1
  7. பிரியாணி இலை 1
  8. வெங்காயம் 1
  9. கருவேப்பிலை சிறிது
  10. பச்சை மிளகாய் 1
  11. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  12. தக்காளி 1
  13. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  14. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  15. கரம் மசாலா 1 ஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு
  17. புதினா சிறிது
  18. கொத்தமல்லி தழை சிறிது
  19. எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசியை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.
  2. குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றவும்.
  3. பட்டை பிரியாணி இலை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சேர்க்கவும்.
  4. சோம்பு சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. மிளகாய்த்தூள் கரம் மசாலா மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
  8. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  9. சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  10. தக்காளி நன்றாக வதங்கியதும் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும் .
  11. அரிசிக்கு 2 மடங்கு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கொள்ளவும்.
  12. கொத்தமல்லி தழை புதினா சேர்க்கவும்.எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
  13. சுவையான குஸ்கா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்