வீடு / சமையல் குறிப்பு / ஸ்பெஷல் லன்ச் பாக்ஸ் ரெசிப்பி

Photo of Special lunch box recipes by hajirasheed haroon at BetterButter
515
2
0.0(0)
0

ஸ்பெஷல் லன்ச் பாக்ஸ் ரெசிப்பி

Aug-28-2018
hajirasheed haroon
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பெஷல் லன்ச் பாக்ஸ் ரெசிப்பி செய்முறை பற்றி

லன்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1.நெய் சோறு செய்ய தேவையான பொருட்கள்;
  2. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  3. நெய் 100 ml
  4. வெங்காயம் 4
  5. தக்காளி-2
  6. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  7. புதினா மல்லி இலை சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. தேங்காய்ப்பால் ஒரு கப்
  10. பச்சைமிளகாய் 2
  11. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை
  12. 2. பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள்
  13. பாஸ்மதி அரிசி அரை கிலோ
  14. சிக்கன் அரை கிலோ
  15. வெங்காயம் கால் கிலோ
  16. தக்காளி நான்கு
  17. இஞ்சி பூண்டு விழுது நான்கு ஸ்பூன்
  18. புதினா மல்லி இலை சிறிதளவு
  19. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  20. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  21. பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிப்பதற்கு
  22. தயிர் கால் கப்
  23. உப்பு தேவையான அளவு
  24. எலுமிச்சை சாறு சிறிதளவு
  25. எண்ணை தேவையான அளவு
  26. சிவப்பு நிற கேசரி பவுடர் உப்பு பின்ச்
  27. 3 . சிக்கன் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள்
  28. போன்லெஸ் சிக்கன் கால் கிலோ
  29. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  30. கான்பிளவர் மாவு 2 ஸ்பூன்
  31. தயிர் 2 ஸ்பூன்
  32. சிக்கன் 65 பவுடர் ஒரு பாக்கெட்
  33. உப்பு ஒரு பின்ச்
  34. எண்ணெய் தேவையான அளவு
  35. 4. மட்டன் கோலா உருண்டை செய்வதற்கு தேவையான பொருட்கள்
  36. எலும்பில்லாத மட்டன் துண்டுகள் 100 கிராம்
  37. தேங்காய் அரை மூடி
  38. பொட்டுக்கடலை கால்
  39. பட்டை ஏலக்காய் கிராம்பு ஒன்று
  40. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
  41. வெங்காயம்-3
  42. உப்பு தேவையான அளவு
  43. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்
  44. அதற்கு தேவையான அளவு எண்ணெய்
  45. 5. கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள்
  46. சிக்கன் கால் கிலோ
  47. வெங்காயம் நான்கு
  48. தக்காளி-3
  49. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  50. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  51. மிளகாய்த்தூள்-2
  52. தனியா தூள் 2 டீஸ்பூன்
  53. கரம் மசாலா 1 ஸ்பூன்
  54. பெப்பர் தூள் 1 ஸ்பூன்
  55. உப்பு தேவையான அளவு
  56. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1. நெய் சோறு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் நெய்ய ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும்
  2. பிறகு வெங்காயம் பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் புதினா மல்லி இலை உப்பு இஞ்சி பூண்டு விழுது தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  3. எல்லாம் நன்கு வதங்கியவுடன் அதில் ஒரு கப் பால் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் தண்ணீர் கொதி வந்ததும் பாஸ்மதி அரிசியை உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. 2. சிக்கன் பிரியாணி செய்வதற்கு சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்
  5. குக்கரில்எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி புதினா மல்லி இலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு சிக்கன் துண்டுகள் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் தனியாத்தூள் தயிர் ஊற்றி வேக விடவும்
  6. சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை ஆப் செய்துவிடவும்
  7. 3. சிக்கன் சிக்ஸ்டி பைவ் செய்வது போன்லெஸ் சிக்கன் எடுத்துக்கொள்ளவும் அதில் இஞ்சி பூண்டு விழுது சிக்கன் சிக்ஸ்டி பைவ் பவுடர் கான்பிளவர் மாவு தயிர் உப்பு சேர்த்து பிரட்டி வைத்துக் கொள்ளவும்
  8. 20 நிமிடம் கழித்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  9. 4. மட்டன் கோலா உருண்டை செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தண்ணீர் வற்றும் வரை வதக்கிக் கொள்ளவும் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  10. மற்றொரு கடாயில் தேங்காய் வேர்கடலை பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும் இந்த கலவையை மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும் பொடி இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு வெங்காயம் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்
  11. அரைத்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  12. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  13. 5.சிக்கன் கிரேவி செய்ய சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியதும் உப்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
  14. தக்காளி இஞ்சி பூண்டு தக்காளியை நைசாக அரைத்து அதனுடன் கலந்து கொள்ளவும் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்
  15. உருளைக்கிழங்கு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வேகவிடவும் பெப்பர் தூள் சேர்த்து இறக்கி பரிமாறலாம்
  16. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்