வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு வைக்கப்பட்ட இட்லிகள்

Photo of Potato stuffed Idlis by Neeru Srikanth at BetterButter
911
13
5.0(0)
0

உருளைக்கிழங்கு வைக்கப்பட்ட இட்லிகள்

Jun-18-2016
Neeru Srikanth
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி மாவு – 2 கப்
  2. பெரிய உருளைக்கிழங்கு – 1
  3. வெங்காயம் – 1 கப்
  4. இஞ்சி – 1 இன்ச் நறுக்கப்பட்டது
  5. பச்சை மிளகாய் – 1 நறுக்கப்பட்டது
  6. கறிவேப்பிலை - கொஞ்சம்
  7. உப்பு – சுவைக்கேற்ற அளவு
  8. கடுகு – 1/3 தேக்கரண்டி
  9. சீரகம் – ½ தேக்கரண்டி
  10. பெருங்காயம் – தாராளமான சிட்டிகை
  11. கொத்துமல்லி - கொஞ்சம்
  12. பூண்டு - 1 விருப்பத்தைப் பொருத்து

வழிமுறைகள்

  1. வழக்கமான முறையில் இட்லி மாவைத் தயார் செய்துகொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கு, நறுக்கப்பட்ட வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை வேகவைக்கவும்.
  3. ஒரு கடாயில், எண்ணெய், பெருங்காயம், கடுகு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். கடுகு பொரியட்டும்.
  4. பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை 1-2 நிமிடங்கள் வறுக்கவும்.
  5. வெங்காயம் சேர்த்து, கண்ணாடிபோல் ஆகும் வரை வதக்கவும்.
  6. உருளைக்கிழங்கை மசித்து சேர்த்துக்கொள்ளவும், மஞ்சள் தூளையும் சேர்த்துக்கொள்ளவும்.
  7. மசாலா ’கள் நன்றாகக் கலந்து குழம்பு அடர்த்தியாகும்வரை வேகவைக்கவும். பூரணம் தயார்.
  8. அவற்றை 16 சமமான உருண்டைகளாகப் பிரித்து வடைபோல் தட்டி வைத்துக்கொள்ளவும்.
  9. இட்லிப் பானையை எடுத்து, இட்லிக் குழியியல் மாவை ஊற்றவும்.
  10. உருளைக்கிழங்கு வடையை மாவின் மீது வைக்கவும்.
  11. மீதமுள்ள இட்லி குழிகளிலும் மாவால் நிரப்பவும்.
  12. அவற்றை 15-20 நிமிடங்கள் அல்லது வழக்கம் போல் நீங்கள் மேற்கொள்ளும் சேரத்திற்கு வேகவைக்கவும்.
  13. அடுப்பை நிறுத்திவிட்டு திறந்த நிலையில் 5 நிமிடங்கள் விடவும்.
  14. இட்லிகளை எடுத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்குக் கொடுக்க அவற்றை பாதியாக வெட்டிக்கொள்ளவும், அது பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். சில சுவையான சட்டினியோடு அதை பரிமாறுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்