வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பருப்புசிலி

Photo of Vazhaipoo Paruppu Usili by Sowmya Sundar at BetterButter
444
0
0.0(0)
0

வாழைப்பூ பருப்புசிலி

Aug-31-2018
Sowmya Sundar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பருப்புசிலி செய்முறை பற்றி

பருப்பு உசிலி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து செய்த வாழைப்பூ பொரியல். வாழைப்பூ குறிப்பாக பெண்களுக்கு மிகவும் நல்லது .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பூ 1 பெரியது
  2. மோர் 1/8 கப்
  3. துவரம் பருப்பு-1/4 கப்
  4. கடலை பருப்பு -1/8 கப்
  5. மிளகாய் வற்றல் 3
  6. பச்சை மிளகாய் 1
  7. தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
  8. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  9. கடுகு 1 டீஸ்பூன்
  10. உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
  11. கறிவேப்பிலை சிறிது
  12. உப்பு தேவையான அளவு
  13. பெருங்காய பொடி 1/2 டீஸ்பூன்
  14. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை கள்ளன் எடுத்து விட்டு பொடியாக நறுக்கிக் மோர் சேர்த்த தண்ணீரில் போட்டு கொள்ளவும். பின் குக்கரில் வேக வைத்து வடிகட்டி கொள்ளவும்
  2. பருப்பு வகைகளை சேர்த்து தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பின் தண்ணீர் முழுமையாக வடித்து விட்டு மிக்சியில் மிளகாய் வற்றல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள் ,பெருங்காயம் , பருப்பு விழுதை சேர்த்து நன்றாக உதிர்ந்து வரும் வரை வதக்கவும்.
  5. பின்னர் வேக வைத்த வாழைப்பூ மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்