வீடு / சமையல் குறிப்பு / வாழை விருந்து

Photo of Vazhai(Banana) Virunthu by suganya balusamy at BetterButter
1106
3
0.0(0)
0

வாழை விருந்து

Sep-03-2018
suganya balusamy
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழை விருந்து செய்முறை பற்றி

மதிய உணவிற்காக வாழை சம்பந்தபட்டவைகளை சமைத்து பறிமாறினேன்.அனைத்தும் என் கணவருக்கு மிகவும் பிடித்தது.நான் சமைத்த வகைகளின் சிறிய தொகுப்பு:1.வாழைப்பழம் போண்டா,2.வாழைக்காய் வறுவல்,3.வாழைக்காய் மிளகு பிரட்டி,4.வாழைத்தண்டு துவையல்,5.வாழைப்பூ பிரட்டர்ஸ்,6.வாழைத்தண்டு ரசம்,7.வாழைத்தண்டு மோர்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1.வாழைப்பழம் போண்டா:
  2. 1/2 கப் மைதா மாவு
  3. 1/4 கப் அரிசி மாவு
  4. 1 பழுத்த நேந்திரம் பழம்
  5. 1/2 கப் துருவிய வெல்லம்
  6. 1/2 கப் தண்ணீர்
  7. ஒரு சிட்டிகை சோடா உப்பு
  8. 1/4 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள்
  9. 2 கப் எண்ணெய்(பொரிப்பதற்கு)
  10. 2.வாழைக்காய் வறுவல்:
  11. அரைப்பதற்கு:
  12. 3 பல் பூண்டு
  13. சிறிய துண்டு இஞ்சி
  14. 1/2 தேக்கரண்டி சீரகம்
  15. 1/2 தேக்கரண்டி மிளகு
  16. 2 வரமிளகாய்
  17. 2 பச்சைமிளகாய்
  18. சிறிதளவு கறிவேப்பிலை
  19. 1 தக்காளி
  20. சிறிதளவு மல்லித்தழை
  21. 1 மேசைக்கரண்டி தண்ணீர்
  22. வதக்குவதற்கு:
  23. 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  24. 2 நறுக்கிய வாழைக்காய்
  25. 1/2 தேக்கரண்டி கடுகு
  26. சிறிதளவு கறிவேப்பிலை
  27. 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  28. 1/4 தேக்கரண்டி மஞ்சள்த்தூள்
  29. உப்பு தேவையான அளவு 
  30. அரைத்த மசாலா
  31. 1/2 - 3/4 கப் தண்ணீர்
  32. 3.வாழைக்காய் மிளகு பிரட்டி:
  33. வாழைக்காய் வேக வைக்க:
  34. 2 வாழைக்காய்
  35. 1/2 தேக்கரண்டி மஞ்சள்த்தூள்
  36. உப்பு தேவையான அளவு
  37. 3 கப் தண்ணீர் 
  38. வதக்குவதற்கு:
  39. 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  40. 1/2 தேக்கரண்டி கடுகு
  41. 1 தேக்கரண்டி உளுந்து பருப்பு
  42. சிறிதளவு கறிவேப்பிலை
  43. 3 நறுக்கிய பச்சை மிளகாய்
  44. 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
  45. 10 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
  46. உப்பு தேவையான அளவு
  47. வேக வைத்து தோழுரித்து நறுக்கிய வாழைக்காய்
  48. 2 தேக்கரண்டி இடித்த மிளகு
  49. 1 1/2 மேசைக்கரண்டி துருவிய தேங்காய்
  50. 4.வாழைத்தண்டு துவையல்:
  51. 1 மேசைக்கரண்டி எண்ணெய்
  52. 6 பச்சை மிளகாய்
  53. 3 பல் பூண்டு
  54. 1 கப் நுறுக்கிய வாழைத்தண்டு
  55. 2 மேசைக்கரண்டி உளுந்து பருப்பு
  56. 2 மேசைக்கரண்டி துருவிய தேங்காய்
  57. நெல்லிக்காய் அளவு புளி
  58. உப்பு தேவையான அளவு
  59. 5.வாழைப்பூ பிரட்டர்ஸ்:
  60. 3/4 கப் கடலை மாவு
  61. 1/4 கப் அரிசி மாவு
  62. 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  63. 1 தேக்கரண்டி உப்பு
  64. 1/2 தேக்கரண்டி வரமிளகாய்த்தூள்
  65. 1/2 கப் தண்ணீர்
  66. 3/4 கப் சுத்தம் செய்த வாழைப்பூ
  67. 2 கப் எண்ணெய்(பொரிக்க தேவையான அளவு)
  68. 6.வாழைத்தண்டு ரசம்:
  69. 1 நறுக்கிய தக்காளி
  70. 1/2 கப் நறுக்கிய வாழைத்தண்டு
  71. 1 1/2 கப் தண்ணீர்
  72. 2 தேக்கரண்டி எண்ணெய்
  73. 1/2 தேக்கரண்டி கடுகு
  74. 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
  75. 2 பச்சை மிளகாய்
  76. சிறிதளவு கறிவேப்பிலை
  77. 1 தேக்கரண்டி சீரகம்
  78. 1 தேக்கரண்டி மிளகு
  79. 3 பல் பூண்டு
  80. உப்பு தேவையான அளவு
  81. 2 துளிகள் எலுமிச்சை சாறு
  82. சிறிதளவு மல்லித்தழை
  83. 7.வாழைத்தண்டு மோர்:
  84. 1/2 கப் நறுக்கிய வாழைத்தண்டு
  85. 1 கப் தண்ணீர்
  86. 1 பச்சை மிளகாய்
  87. சிறிதளவு மல்லித்தழை
  88. சிறிதளவு கறிவேப்பிலை
  89. சிறிய துண்டு இஞ்சி
  90. 1/2 கப் தயிர்
  91. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1.வாழைப்பழம் போண்டா:
  2. பாத்திரத்தில் நேந்திரம் பழத்தை நன்கு மசிக்கவும்.அதனுடன் மைதா மாவு,அரிசி மாவு,வெல்லம்,சோடா உப்பு,ஏலக்காய்த்தூள்,தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.
  3. கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் பிசைந்த மாவை சிறிது சிறிதாக போண்டா போல் போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  4.  2.வாழைக்காய் வறுவல்:
  5. மிக்ஸியில் ‘அரைப்பதற்கு’ கொடுத்த பொருட்களை விழுது போல் அரைக்கவும்.கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு,கறிவேப்பிலை பொரித்து அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  6. அதனுடன்  வாழைக்காய்,மிளகாய்த்தூள்,மஞ்சள்த்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.மூடியை எடுத்து 2 நிம்டங்கள் சுருள வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  7. 3.வாழைக்காய் மிளகு பிரட்டி:
  8. பாத்தரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வாழைக்காய்,மஞ்சள்த்தூள்,உப்பு சேர்த்து மூடி போட்டு 10 - 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.வேக வைத்த வாழைக்காயை தோலுரித்து பொடியாக நறுக்கவும்.
  9. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உளுந்து பருப்பு பொரியவிடவும்.அதன்பின் கறிவேப்பிலை,இஞ்சி,பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  10. அதனுடன் வாழைக்காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கியபின் இடித்த மிளகு,உப்பு,துருவிய தேங்காய் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  11. 4.வாழைத்தண்டு துவையல்:
  12. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பச்சை மிளகாய்,பூண்டு,வாழைத்தண்டு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.அதனுடன் உளுந்து பருப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கியபின் தேங்காய்,புளி,உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.
  13. சூடு ஆறியபின் மிக்சியில் வதக்கியதை அரைக்கவும்(தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்).சுடு சாதனத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
  14. 5.வாழைப்பூ பிரட்டர்ஸ்:
  15. பாத்திரத்தில் எண்ணெயைத் தவிர மற்ற பொருள்களை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு கலக்கவும்.
  16. அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும் வாழைப்பூவை மாவில் பிரட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  17. 6.வாழைத்தண்டு ரசம்:
  18. தக்காளியுடன்,1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு பிழியவும்.வாழைத்தண்டை 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து சாறை மட்டும் வடிகட்டவும்.சீரகம்,மிளகை இடித்து வைக்கவும்.பூண்டை நசுக்கி வைக்கவும்.
  19. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு,பெருங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,இடித்த சீரகம் மிளகு,நசுக்கிய பூண்டு சேர்த்து 1 நமிடம் வதக்கி அதனுடன் தக்காளி சாறு,வாழைத்தண்டு சாறு,உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் மல்லித்தழை,எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  20. 7.வாழைத்தண்டு மோர்:
  21. மிக்சியில் வாழைத்தண்டு,1/2 கப் தண்ணீர்,பச்சை மிளகாய்,மல்லித்தழை,மல்லித்தழை,இஞ்சி சேர்த்து அரைத்து வடிகட்டவும்.
  22. மிக்சியில் தயிர்,1/2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று விட்டு அதனுடன் வடித்த வாழைத்தண்டு சாறு,உப்பு சேர்த்து மறுபடியும் ஒரு சுற்று விட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்