வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ மோர்கூட்டு

Photo of Banana flower morkuttu by Krishnasamy Vidya Valli at BetterButter
330
0
0.0(0)
0

வாழைப்பூ மோர்கூட்டு

Sep-06-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ மோர்கூட்டு செய்முறை பற்றி

கேரளாவின் பிரபலமான வாழைத்தண்டு மோர்க்கூட்டை வாழைப்பூவில் செய்தால் எப்படி இருக்கும்? ரெசிபி இதோ

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பூ பொடியாக நறுக்கியது ஒரு கப்
  2. உப்பு முக்கால் தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி
  4. தயிர் அரை கப்
  5. பாசிப் பருப்பு அல்லது துவரம் பருப்பு 1/8 கப்
  6. அப்படியே அரைக்க தேவையானவை
  7. தேங்காய் துருவல் 1/2 கப்
  8. சீரகம் ஒரு தேக்கரண்டி
  9. மிளகாய்வற்றல் 2 அல்லது 3
  10. பச்சை மிளகாய் ஒன்று
  11. தாளிக்க தேவையானவை
  12. தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  13. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  14. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  15. மிளகாய்வற்றல் 1
  16. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. வாழைப்பூவில் உப்பு மஞ்சள் பொடி பருப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேக வைத்து எடுக்கவும்
  2. பாசிப்பருப்பு பயன்படுத்துவர்கள் வாழைப் பூவுடன் சேர்த்து வேக வைக்கலாம் துவரம்பருப்பு பயன்படுத்துபவர்கள் தனியே வேக வைத்து எடுக்கவும்
  3. அப்படியே அரைக்க கொடுத்தவற்றை பாதியளவு தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. வேகவைத்த வாழைப்பூவில் அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி விடவும்
  5. தயிர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  6. தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்