வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் நக்கட்ஸ்

Photo of Banana Nuggets by Malar Prabhu at BetterButter
426
0
0.0(0)
0

வாழைக்காய் நக்கட்ஸ்

Sep-09-2018
Malar Prabhu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் நக்கட்ஸ் செய்முறை பற்றி

வாழைக்காயை தோலுடன் சேர்த்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும் .உருளைக்கிழங்குடன் சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் எடுத்து விடவும்.சூடு தனிந்தப் பின்பு தோலை நீக்கி மைய பிசைந்துக் கொள்ளவும்.. வாணலியில் 2-3 டேபூள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும், ப.மிளகாயையும் சேர்த்து கொள்ளவும்..எண்ணெய் பிரிந்து வரும் சமயம் பிசைந்து வைத்துள்ள வாழை, உருளைக்கலவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகாய் தூள், கரம் மாசலா , உப்பு சேர்த்து கலக்கவம்.வாணலியில் இருந்து கலவை பிரிந்து வரும் சமயம் கொத்தமல்லி, பாதியாக பொடித்த வேர்கடலை சேர்க்கவும்இந்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.நன்றாக ஆறியப் பின்பு உருளை வடிவத்தில் பிடித்து வைக்கவும்.சோள மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.உருட்டிய உருளைக்களை சோளத் தண்ணீரில் மூக்கி எடுக்கவும்.ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.சுவையான வாழைக்காய் நக்கட்ஸ் ரெடி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • மேற்கு வங்காளம்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைக்காய் - 3
  2. உருளைக்கிழங்கு - 1
  3. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  4. ப.மிளகாய் - 2 ( நறுக்கிக் கொள்ளவும்)
  5. இஞ்சி, பூண்டு விழுது - 2tsp
  6. மஞ்சள் தூள்-1/2tsp
  7. சீரகத்தூள்-1tsp
  8. தனி மிளகாய் தூள்-1tsp
  9. கரம் மாசலா-1/4tsp
  10. வறுத்த வேர்க்கடலை - 2tsp
  11. ரொட்டித் தூள்-1 கப்
  12. சோள மாவு - 3tsp
  13. உப்பு - தேவைக்கு ஏற்ப
  14. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1. வாழைக்காயை தோலுடன் சேர்த்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும் .உருளைக்கிழங்குடன் சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் எடுத்து விடவும்
  2. 2. சூடு தனிந்தப் பின்பு தோலை நீக்கி மைய பிசைந்துக் கொள்ளவும்
  3. 3. வாணலியில் 2-3 டேபூள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  4. 4. அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும், ப.மிளகாயையும் சேர்த்து கொள்ளவும்
  5. 5. எண்ணெய் பிரிந்து வரும் சமயம் பிசைந்து வைத்துள்ள வாழை, உருளைக்கலவையை சேர்க்கவம். நன்றாகக் கலக்கவும்.
  6. 6. மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகாய் தூள், கரம் மாசலா , உப்பு சேர்த்து கலக்கவம்.
  7. 7. வாணலியில் இருந்து கலவை பிரிந்து வரும் சமயம் கொத்தமல்லி, பாதியாக பொடித்த வேர்கடலை சேர்க்கவும்
  8. 8. இந்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்
  9. 9. நன்றாக ஆறியப் பின்பு உருளை வடிவத்தில் பிடித்து வைக்கவும்
  10. 10. சோள மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்
  11. 11. உருட்டிய உருளைக்களை சோளத் தண்ணீரில் மூக்கி எடுக்கவும்
  12. 12. - ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்
  13. சுவையான வாழைக்காய் நக்கட்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்