வீடு / சமையல் குறிப்பு / வாழை தண்டு சூப் /சட்னி

Photo of Banana stem soup and chutney by Sumaiya shafi at BetterButter
476
1
0.0(0)
0

வாழை தண்டு சூப் /சட்னி

Sep-09-2018
Sumaiya shafi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழை தண்டு சூப் /சட்னி செய்முறை பற்றி

வாழை தண்டு சூப்/சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழை தண்டு 500கிராம்
  2. சின்ன வெங்காயம் 4
  3. தக்காளி 1
  4. சீரகம் தூள்-1டீஸ்பூன்
  5. மிளகு தூள்-2டீஸ்பூன்
  6. மல்லி தூள்-1 டீஸ்பூன்
  7. வத்தல்- 5
  8. இஞ்சி சிறிய துண்டு
  9. பூண்டு -2 துண்டு
  10. உளுந்து பருப்பு-2 டீஸ்பூன்
  11. தேங்காய்- 1/4 கப்
  12. கருவேப்பிலை -சிறிதளவு
  13. உப்பு -தேவையான அளவு
  14. புலி- சிறிய உருண்டை
  15. பெருங்காயம் தூள் 2-3 பின்ச்
  16. சோழம் மாவு-2டீஸ்பூன்
  17. மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் மோரில் உப்பு கலந்து அதில் வாழை தண்டை சிறிதாக நறுக்கி அதை தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
  2. பின் சட்னி செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வத்தல்(4)பெருங்காய தூள்,கருவேப்பிலை மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும்.
  3. வேறு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பாதி அளவு வாழை தண்டு(250 கிராம்) எடுத்து நன்கு வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் தேங்காய் சேர்த்து வதக்கவும்.
  5. கடைசியில் வதக்கிய வாழை தண்டு கலவை ,தாளித்து வைத்த கலவை மற்றும் சிறிது புலி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  6. சுவையான வாழை தண்டு சட்னி தயார்.இட்லி,தோசை மற்றும் variety rice உடன் சாப்பிடலாம்.
  7. இரண்டாவதாக வாழை தண்டு சூப் செய்வதற்கு சின்ன வெங்காயம்(4), தக்காளி(1), இஞ்சி,பூண்டு,வத்தல்(1),கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  8. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த கலவையை நன்கு வதக்கவும்.அதில் நறுக்கிய வாழை தண்டை சேர்த்து 3 க்ளாஸ் தண்ணீரில் சோழ மாவு(2டீஸ்பூன்)சேர்த்து ஊற்றி கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்.
  9. நன்கு கொதித்த பின் சீரகம், மிளகு மற்றும் மல்லி தூள்(விருப்பப்பட்டால் வருத்தும் போடலாம்) சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  10. மல்லி இலை போட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்