வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் மார்ஷ்மெல்லோ

Photo of Coconut Marshmallows by Jayanthy Asokan at BetterButter
659
2
0.0(0)
0

தேங்காய் மார்ஷ்மெல்லோ

Sep-10-2018
Jayanthy Asokan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் மார்ஷ்மெல்லோ செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்தமான மார்ஷ்மெல்லோவை தேங்காயுடன் கலந்து புதுவிதமான தேங்காய் மார்ஷ்மெல்லோ செய்து தரலாம். இதனால் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோயக்கிய முறையில் நாம் தரும் திண்பன்டங்களாகவும் மற்றும் பர்த்டே பார்டிகளுக்கு ஏற்ற டசர்டாகவும் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃப்யூஷன்
  • விஸ்கிங்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. துருவிய தேங்காய் 21/2 கப்
  2. சர்க்கரை 1 3/4 கப்
  3. லிக்விட் குளுக்கோஸ் 3/4 கப்
  4. ஜெலட்டின் 18 கிராம்
  5. தண்ணீர் 1 கப் (1/2 +1/2)
  6. ஐசிங் சுகர் 20 கிராம்
  7. வெண்ணிலா எசன்ஸ் 1 1/2 டீஸ்பூன்
  8. பின்க் ஃபுட் கலர் சிறிதளவு
  9. உப்பு 1 கிராம்

வழிமுறைகள்

  1. மைக்ரோவேவ் அவனை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரி ஹிட் செய்து கொள்ளவும்.
  2. துருவிய தேங்காயயை ஒரு பேக்கிங் ட்ரேயில் வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்யவும்
  3. ஒரு பேக்கிங் ட்ரேயில் சிறிது எண்ணெய் தடவி அதில் ஒரு பார்ச்மண்ட் பேப்பர் வைத்து அதில் பேக் செய்த தேங்காவில் 1 கப் சமாக தூவ வேண்டும்.
  4. அரை கப் தண்ணீரில் ஜெலட்டினை தூவி 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
  5. ஒரு அகலமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ,லிக்விட் குளுக்கோஸ் ,சர்க்கரை உப்பு சேர்த்து மிதமான தனலில் வைக்க வேண்டும்.
  6. சர்க்கரை முழுவதுமாக கரைந்து ஒரு 15 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
  7. ஒரு கேண்டி தெர்மா மீட்டரை வைத்து 115 டிகிரி சென்டிகிரேட் வரும் வரை வைத்து பின் கேஸை அனைத்து விடவேண்டும்.
  8. ஒரு ஸ்டாண்ட் மிக்சர் கொண்டு ஜெலட்டின் கலவையை நன்கு நுரை வரும் வரை அடிக்கவும்.
  9. அடித்துக்கொண்டிருக்கும் ஜெலட்டின் மிக்சரில் சக்கரை கலவையை அதில் கலக்க வேண்டும்.
  10. சர்க்கரை கலவையை 10 நிமிடங்கள் அடிக்கவேண்டும் மூன்று பங்காக இக்கலவை வரவேண்டும்.
  11. இதில் அரை கப் தேங்காய் சேர்க்க வேண்டும்.அரை நிமிடம் கலக்க வோண்டும்.
  12. கலந்த பின் வெனிலா எசன்ஸ் மற்றும் பிங்க் கலர் ஜெல் சேர்த்து 30 நொடி மிக்ஸரில் கலக்க வேண்டும்.
  13. கலவையை தேங்காய் டிரேயில் ஊற்றவும்.
  14. ஊற்றிய பின் அதன் மேல் மீதமுள்ள 1 கப் தேங்காய் தூவ வேண்டும்.
  15. 6 முதல் 8 மணி நேரம் வரை ஆர விடவும்.
  16. ஒரு தட்டில் சிறிது ஐசிங் சுகரை தூவி அதன் மேல் ஆரிய மார்ஸ்மெல்லோவை மாற்ற வேண்டும்.
  17. தேங்காய் மார்ஷ்மெல்லோவை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கட் செய்து பின் அதன் மேல் தேங்காய் மற்றும் ஐசிங் சுகரில் பிரட்டி வைக்க வேண்டும்.
  18. பஞ்சு போன்ற தேங்காய் மார்ஷ்மெல்லோ சாப்பிடத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்