வீடு / சமையல் குறிப்பு / விகன் வாழைப்பழம் தேங்காய் சீஸ் கேக்

Photo of Vegan Banana Coconut Cheesecake with peanut brittle by Pinky Srini at BetterButter
495
3
0.0(0)
0

விகன் வாழைப்பழம் தேங்காய் சீஸ் கேக்

Sep-10-2018
Pinky Srini
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
600 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

விகன் வாழைப்பழம் தேங்காய் சீஸ் கேக் செய்முறை பற்றி

தேங்காய் வாழை ஒன்றுக்கு ஒன்று சலைத்தது அல்ல. அதனால் இரண்டையும் சிறப்பிக்கும் வகையில் இந்த விகன் சீஸ் கேக். முற்றிலும் முட்டை ,பால் , க்ரீம் சீஸ் சேர்க்காமல் எளிதாக வீட்டில் செய்தது. அனைத்து சத்தான சாமான்கள் மூலம் சுவையாக செய்யக்கூடியவை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • ஃப்யூஷன்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அடி பாகம் செய்ய தேவையானவை :
  2. பாதம் பருப்பு 3
  3. ஏதேனும் பட்டர் பிஸ்கெட் 4
  4. பேரிச்சை பழம் 1/4கப்
  5. அலங்கரிக்க கடலை மிட்டாய் (கட்டாயம் இல்லை)
  6. சர்க்கரை 1/4 கப்
  7. வறுத்த கடலை 2tsp
  8. உப்பு 1/4tsp
  9. சீஸ் கேக் செய்ய தேவையானவை :
  10. எலுமிச்சை சாறு 1tbsp
  11. தேன் 1tbsp
  12. சர்க்கரை 1tbsp
  13. தண்ணீர் 1/4கப்
  14. தேங்காய் 1/4 கப்
  15. வாழைப்பழம் 1
  16. வெள்ளரி விதை 1 tsp
  17. முந்திரி பருப்பு 1/2 கப்
  18. வெண்ணிலா எசன்ஸ் 1/2tsp

வழிமுறைகள்

  1. முந்திரி மற்றும் வெள்ளரி விதையை தண்ணீரில் குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மிக்ஸியில் கொட்டை நீக்கிய பேரிசம்பழம் சேர்த்து சில்லு சில்லாக அரைத்து கொள்ளவும்
  3. பின் அதில் பிஸ்கெட் மற்றும் பாதம் சேர்த்து நுணிக்கி கொள்ளவும்
  4. கையில் எடுத்து பார்க்கும் போது பிசுபிசுப்பாக மற்றும் கொரகொரப்பாக இருத்தல் வேண்டும்
  5. பேக்கிங் டின்னில் எண்ணெய் தடவி பட்டர் பேப்பர் இடவும்
  6. பின் தயாரித்த பொடி அதன் மேல் இட்டு ஒரு ஸ்பூன் மூலம் நன்கு அழுத்தவும்
  7. அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து விடவும்
  8. மிக்ஸியில் தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து மிகவும் கெட்டியான முதல் பால் எடுத்து கொள்ளவும்
  9. பின் மிக்ஸியில் மசித்த வாழைப்பழம் , தேன், எலுமிச்சை சாறு, சீனி, தேங்காய் பால், வெண்ணிலா எசன்ஸ் ,ஊற வைத்த முந்திரி மற்றும் வெள்ளரி விதை ஆகிவற்றை சேர்க்கவும்
  10. குறைந்தது இரண்டு நிமிடம் நன்றாக மை போல் அரைத்து கொள்ளவும்
  11. இதனை தயார் செய்து வைத்து உள்ள பேரிச்சை மீது சமமாக ஊற்றவும்
  12. அதை குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை பிரிஸேரில் செட் ஆகும் வரை வைக்கவும்
  13. பரிமாறும் முன்பு சாதாரண குளிரில் 1நிமிடம் வைத்து பரிமாறவும்
  14. டின்னில் இருந்து எடுக்க கூரான கத்தி சூடு நீரில் வைத்து பின் அதை துடைத்து கேக் மற்றும் டின்னின் நடுவில் விட்டு எடுத்தால் ஒட்டாமல் வரும்
  15. எடுத்தவுடன் உடனடியாக பரிமாறவும்
  16. மேலும் மிக்ஸை ஊற்றும் முன்னரே , ஒட்டாமல் வர பட்டர் பேப்பர் மூலம் நன்றாக டின்னை கவர் செய்யவும்
  17. கடலை மிட்டாய் செய்ய :
  18. வாணலியில் சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்
  19. சர்க்கரை நல்ல பொன் நிறம் அடைந்து ஒரு கம்பி பதம் வரும்போது அடுப்பை நிறுத்தவும் . பின் கடலை மற்றும் உப்பை சேர்த்து கலக்கவும்
  20. அதனை கிச்சன் அடுப்பின் மீது அல்லது ஒரு தட்டில் ஊற்ற வேண்டும்
  21. அது நன்கு ஆறிய பிறகு நன்றாக தூள் தூள் ஆக உடைத்து கேக் மேல் தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்