வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப் பால் குருமா

Photo of Coconut milk kurma by Renuka Devi at BetterButter
548
0
0.0(0)
0

தேங்காய்ப் பால் குருமா

Sep-11-2018
Renuka Devi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப் பால் குருமா செய்முறை பற்றி

மிகவும் எளிமையான குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக் கிழங்கு சிறியது 1
  2. வெங்காயம் மீடியம் சைஸ் 1
  3. பச்சை மிளகாய் கீறியது 2
  4. கெட்டி தேங்காய்ப்பால் 2 கப்
  5. தண்ணீர் தேங்காய் பால் 2 கப்
  6. சோள மாவு 2 டேபிள்ஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய் சிறிதளவு
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. விரும்பினால் இஞ்சி பூண்டு நீளவாக்கில் நறுக்கியது ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கவும்
  2. வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கவும்
  3. தண்ணீர் தேங்காய் பாலில் வெங்காயம் உருளைக்கிழங்கு பச்சை மிளகாய் உப்பு போட்டு கொதிக்க விடவும்
  4. காய்கள் வெந்ததும் சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்
  5. சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றவும் கூடவே கருவேப்பிலை ஒரு கொத்து போடவும்
  6. கெட்டித் தேங்காய்ப் பாலை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
  7. ஆப்பத்திற்கு ஏற்ற உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் குருமா ரெடி.
  8. விரும்பினால் கேரட் பீன்ஸ் பட்டாணி போன்ற எல்லா காய்கறிகளையும் போட்டு கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்