வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பொடிமாஸ்

Photo of Plantain podimas by Rachell Revathi Samuel at BetterButter
135
1
0.0(0)
0

வாழைக்காய் பொடிமாஸ்

Sep-11-2018
Rachell Revathi Samuel
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பொடிமாஸ் செய்முறை பற்றி

வாழைக்காயை வேகவைத்து துருவி செய்யப்படும் பொடிமாஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வாழைக்காய் பெரியதில் பாதி அல்லது சிறியது 1
  2. எண்ணெய் 2 ஸ்பூன்
  3. கடுகு 1/2 ஸ்பூன்
  4. உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  5. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  6. பெருங்காயம் சிறிது
  7. வெங்காயம் 1
  8. கருவேப்பிலை சிறிது
  9. பூண்டு 3 பல்
  10. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைக்காயை குக்கரில் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
  2. வேக வைத்த வாழைக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.பெருங்காயம் சேர்க்கவும்.
  4. வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. வெள்ளை பூண்டு சேர்த்து வதக்கவும்.
  6. மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
  7. வாழைக்காயை சேர்த்து வதக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  8. வாழைக்காயில் மசாலா ஏறும் வரை வதக்கி இறக்கவும்
  9. சுவையான வாழைக்காய் பொடிமாஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்