வீடு / சமையல் குறிப்பு / பிரெட் ஏந்திரப்பழ டோஸ்ட்

Photo of Bread banana toast by Fathima Beevi at BetterButter
71
1
0.0(0)
0

பிரெட் ஏந்திரப்பழ டோஸ்ட்

Sep-11-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரெட் ஏந்திரப்பழ டோஸ்ட் செய்முறை பற்றி

பிரெட் ஏந்திரப்பழ டோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ப்ரௌன் பிரட்-8
  2. ஏந்திர பழம் -1 - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
  4. தேங்காய்த் துருவல் -1/4 கப்
  5. நெய் -1 டேபிள்ஸ்பூன்
  6. தேங்காய் எண்ணெய் பொரிப்பதற்கு
  7. முட்டை கலவை தேவையான பொருட்கள்
  8. முட்டை -1
  9. சர்க்கரை -1 டேபிள்ஸ்பூன்
  10. பால் - 1 டேபிள்ஸ்பூன்
  11. சர்க்கரை சிறிதளவு தூவுவதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி நறுக்கிய ஏந்திர பழத்தை சேர்க்கவும்
  2. இதனுடன் தேங்காய் துருவல் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்
  3. நன்கு மிருதுவாகும் வரை வதக்கவும்
  4. நன்கு வதங்கிய பின் குளிர வைக்கவும்
  5. ஒரு பாத்திரத்தில் முட்டை பால் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்
  6. ஒரு பிரெட்டின் நான்கு முனைகளையும் நறுக்கிவிட்டு சப்பாத்தி கட்டை கொண்டு மெல்லியதாக தேய்க்கவும்
  7. வதக்கிய ஏந்திர பழத்தை பிரட்டின் நடுவில் சிறிது வைக்கவும்
  8. பிரெட்டின் ஓரங்களை முட்டைக் கலவையை கொண்டு தடவி ரோல்களை உண்டாக்கவும்
  9. ஒரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்
  10. பிரட் ரோல்களை முட்டைக் கலவையில் நனைத்து எடுத்து தேங்காய் எண்ணெயில் எல்லா பக்கமும் பொன்னிறம் ஆகும் வரை டோஸ்ட் செய்யவும்
  11. நன்றாக டோஸ்ட் செய்த பின் ஒரு பரிமாறும் தட்டிற்கு மாற்றி சர்க்கரை தூவி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்