வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பிரியாணி

Photo of Plantain Biriyani by Rachell Revathi Samuel at BetterButter
130
2
0.0(0)
0

வாழைக்காய் பிரியாணி

Sep-11-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பிரியாணி செய்முறை பற்றி

வாழைக்காய் சேர்த்து செய்யப்படும் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வாழைக்காய் 1
  2. எண்ணெய் பொரிக்க
  3. எண்ணெய் 3 ஸ்பூன்
  4. பட்டை 1
  5. கிராம்பு 1
  6. ஏலக்காய் 1
  7. அன்னாசி பூ 1
  8. பிரியாணி இலை 1
  9. சோம்பு 1/4 ஸ்பூன்
  10. வெங்காயம் 1
  11. கருவேப்பிலை சிறிது
  12. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  13. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  14. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  15. தக்காளி 1
  16. அரிசி 3/4 கப்
  17. கரம் மசாலா 1 ஸ்பூன்
  18. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வாழைக்காய் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  3. பொரித்த வாழைக்காய் துண்டுகள்
  4. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சோம்பு சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  6. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
  8. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  9. தக்காளி வதங்கியதும் பொரித்த வாழைக்காய் துண்டுகளை போடவும்.
  10. ஊற வைத்த அரிசி சேர்க்கவும்.
  11. கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  12. அரிசிக்கு 2 மடங்கு தண்ணீர் சேர்க்கவும்.கொத்தமல்லி தழை மற்றும் உப்பு சேர்க்கவும்.குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
  13. சுவையான வாழைக்காய் பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்