ஓட்ஸ் பருப்பு வடை | ஓட்ஸ் மசாலா வடை | Oats Paruppu Vadi |Oats Masala Vadai in Tamil

எழுதியவர் Manjula Bharath  |  26th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Oats Paruppu Vadi |Oats Masala Vadai by Manjula Bharath at BetterButter
ஓட்ஸ் பருப்பு வடை | ஓட்ஸ் மசாலா வடைManjula Bharath
  • ஆயத்த நேரம்

    3

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

347

0

ஓட்ஸ் பருப்பு வடை | ஓட்ஸ் மசாலா வடை recipe

ஓட்ஸ் பருப்பு வடை | ஓட்ஸ் மசாலா வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Oats Paruppu Vadi |Oats Masala Vadai in Tamil )

  • சுவைக்கேற்ற உப்பு
  • பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
  • கொத்துமல்லி இலைகள் - 1/4 கப் (நறுக்கியது)
  • கறிவேப்பிலை - 1-2 கொத்து (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 3-4 எண்ணிக்கை (நறுக்கியது)
  • வெங்காயம் - 3தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
  • உடனடி ஓட்ஸ் - 1/4 கப்
  • கடலை பருப்பு - 1கப்

ஓட்ஸ் பருப்பு வடை | ஓட்ஸ் மசாலா வடை செய்வது எப்படி | How to make Oats Paruppu Vadi |Oats Masala Vadai in Tamil

  1. கடலைப்பருப்பைக் கழுவி 2-3 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. தண்ணீரை முழுமையாக வடிக்கட்டி ஒரு பிளண்டரில் போடவும்.
  3. பொறபொறப்பான மாவாகத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
  4. தேவைப்படுமானால் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்துக்கொள்ளவும் ஆனால் மாவைத் தண்ணீராக்கிக்கொள்ளவேண்டாம்.
  5. மாவை பொறபொறப்பான பதத்தில் 2-3 முறை அரைத்துக்கொள்ளவும்.
  6. இந்த மாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, அனைத்துப் பொருள்களையும் சேர்த்து அவற்றை நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  7. மாவை சமப்பாகங்களாகப் பிரித்து வடை வடிவத்தில் உங்கள் உள்ளங்கைகளில் தட்டி அழுத்தவும்.
  8. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி வடையை எண்ணெயில் போட்டு அதன் இரு பக்கங்களும் பொன்னிறமாகும்வரை சிம்மில் வறுக்கவும். அப்போதுதான் வடையின் உள்பகுதி நன்றாக வேகும்.
  9. சல்லிக்கரண்டியால் பொரித்த வடையை எடுத்து சமையல் துண்டில் எடுத்து அதிகப்படியானத் தண்ணீரை வடிக்கட்டவும்.
  10. பச்சை அல்லது தேங்காய் சட்னியோடுச் சூடாகப் பரிமாறவும்!!

எனது டிப்:

அனைத்துப் பொருள்களையும் கலந்தபின்னர், வடை மாவு தயார். வடைகளுக்கு ரெஸ்டிங் டைம் கொடுக்கவேண்டாம்.

Reviews for Oats Paruppu Vadi |Oats Masala Vadai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.