வீடு / சமையல் குறிப்பு / கொத்து சப்பாத்தி

Photo of Koththu Chappathi by Fathima Sujitha at BetterButter
318
2
0.0(0)
0

கொத்து சப்பாத்தி

Sep-22-2018
Fathima Sujitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொத்து சப்பாத்தி செய்முறை பற்றி

காலையில் போட்ட சப்பாத்தி மீந்து போய்விட்டால் அதை இரவு இப்படி கொத்து சப்பாத்தி ஆக செய்து சாப்பிடுங்கள் ருசியாக இருக்கும்..!!

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சப்பாத்தி - 3
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. கொத்தமல்லி புதினா- சிறிதளவு
  5. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  7. சப்பாத்தி குருமா அல்லது கறி குழம்பு - தேவையான அளவு
  8. முட்டை - 2
  9. எண்ணெய் - தேவையான அளவு
  10. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மீந்த சாப்பாத்தியை நன்கு தோசையை கல்லில் போட்டு சூடாக்கி கொள்ளவும்.
  2. சிறு சிறு துண்டுகளாக பிச்சி போட்டு வைத்துக் கொள்ளவும்.
  3. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. கொத்தமல்லி புதினா சேர்க்கவும்.
  6. மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்க்கவும்.
  7. பிச்சி வைத்துள்ள சப்பாத்தியை சேர்க்கவும்.
  8. நன்கு வதங்கியதும், குருமாவில் முட்டையை ஊற்றி நன்கு கலக்கி வைத்து கொள்ளவும்.
  9. குருமா மற்றும் சப்பாத்தியில் உப்பு இருக்கு சோ, தேவைக்கு பார்த்து கொண்டு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  10. இறுதியாக குருமா முட்டை கலவையை ஊற்றவும்.
  11. நன்கு கிளறி, கொத்து பரோட்டா கொத்துவதை போல் கொத்தவும்.
  12. புதினா கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  13. கொத்து சப்பாத்தி தயார்..!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்