வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு ரசம்

Photo of Kollu rasam/ Horsegram Rasam by Fathima Beevi at BetterButter
555
2
0.0(0)
0

கொள்ளு ரசம்

Sep-23-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு ரசம் செய்முறை பற்றி

கொள்ளு ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொள்ளு -100 கிராம்
  2. சீரகம் - 1/2 டீஸ்பூன்
  3. மிளகு- 1/2 டீஸ்பூன்
  4. பூண்டுபற்கள் - 8
  5. கொத்தமல்லி இலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
  6. கறிவேப்பிலை - 1 டேபிள் ஸ்பூன்
  7. காய்ந்த சிவப்பு மிளகாய் -1
  8. தக்காளி -1
  9. புளி - 1 எலுமிச்சை அளவு
  10. கடுகு - 1/4 டீஸ்பூன்
  11. எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
  12. பெருங்காயத்தூள்  - 1 சிட்டிகை
  13. மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
  14. உப்பு - 1/2 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை சூடாக்கி அதில் கொள்ளு சேர்க்கவும்
  2. கொள்ளு மனம் வரும் வரை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்
  3. பின்பு வறுத்த கொள்ளு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
  4. விசில் அடங்கியதும் கொள்ளு வேக வைத்த தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி புளி யை 10 நிமிடம் ஊற வைக்கவும்
  6. மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, பூண்டு, தக்காளி, காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் சிறிது கருலேப்பில்லை சேர்த்து கர கரவென அரைத்து எடுக்கவும்
  7. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து சிறிது கருலேப்பில்லை சேர்க்கவும்
  8. பின்பு அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  9. நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங் காயத்தூள் சேர்த்து கிளறி கரைத்து வைத்த புளி கரைசலை வடிகட்டி சேர்க்கவும்.
  10. பின்பு வடிகட்டி வைத்துள்ள கொள்ளு தண்ணீரை சேர்க்கவும்.
  11. ரசம் கொதி வரும் முன் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து கொத்தமல்லி இலை களை தூவி விடவும்.
  12. சுவையான கொள்ளு ரசம் தயார்.  சூடான சாதத்துடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்