வீடு / சமையல் குறிப்பு / ஹைதராபாத் ஸ்பெஷல் ரொமாலி ரொட்டியுடன் அஃப்கானி மட்டன்

Photo of Hyderabad special Rumali roti with Afghani mutton by Meera Ansari at BetterButter
1026
1
0.0(0)
0

ஹைதராபாத் ஸ்பெஷல் ரொமாலி ரொட்டியுடன் அஃப்கானி மட்டன்

Sep-24-2018
Meera Ansari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

ஹைதராபாத் ஸ்பெஷல் ரொமாலி ரொட்டியுடன் அஃப்கானி மட்டன் செய்முறை பற்றி

ஹைதராபாத்தில் ஸ்பெஷலாக செய்யப்படும் ரூமாலி ரொட்டி செய்முறை இங்கு வழங்கப்பட்டுள்ளது அதனுடன் அஃப்கானி மட்டன் வழங்கப்பட்டுள்ளது சுவைத்து மகிழுங்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஹைதராபாத்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. மைதா மாவு ஒரு கப்
  3. தயிர் 2 மேசை கரண்டி
  4. எண்ணெய் 2 மேசைக்கரண்டி
  5. மிதமான சூடு பால் அரை கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. தண்ணீர் ஒரு கப்
  8. மட்டன் அரை கிலோ
  9. சின்ன வெங்காயம் அரை கப்
  10. தக்காளி-2
  11. வத்தல் ஐந்திலிருந்து ஆறு
  12. ஏலக்காய் பட்டை கிராம்பு சிறிதளவு
  13. மிளகு ஒரு மேசைக்கரண்டி
  14. முந்திரிபருப்பு 5
  15. பாதாம் 4
  16. பிஸ்தா 4
  17. இஞ்சி பூண்டு விழுது 3 மேஜைக்கரண்டி
  18. மஞ்சள் பொடி சிறிதளவு
  19. வத்தல் பொடி சிறிதளவு
  20. நல்லெண்ணெய் சிறிதளவு
  21. மல்லி புதினா சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவில் ஒருசேர கலக்கவும்
  2. நடுவில் கிணறு போல் குழிதோண்டி அதில் தயிர் எண்ணெய் உப்பு சேர்க்கவும்
  3. பிறகு எல்லாவற்றையும் கலந்து சூடு பாலை சேர்த்து நன்கு கிளறவும்
  4. தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்
  5. நன்கு மிருதுவாக வந்தவுடன் சிறிது எண்ணையை மேலே தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  6. ஒரு இரும்புக் கடாயில் அல்லது நான்ஸ்டிக் பேனைப் தலைகீழாக அடுப்பில் வைத்து சூடு படுத்தவும்
  7. ஒரு சிறிய பாத்திரத்தில் உப்பு சேர்த்து தண்ணீரில் கலக்கி வைத்துக் கொள்ளவும்
  8. இரவு சப்பாத்தி மாதிரி பிறகு ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மெல்லியதாக அழுத்தவும்
  9. மெல்லியதாக அழுத்தியவுடன் சப்பாத்தி கட்டையை வைத்து மெதுவாக உருட்டவும்
  10. கடாய் சூடானதும் சிறிது தண்ணீரை கடாயில் அடிப்பக்கத்தில் தெளித்து விடவும்
  11. பிறகு சப்பாத்தியையும் மெதுவாக கடாயின் அடிப்பாகத்தில் பரத்தவும்
  12. 2 நிமிடங்கள் கழித்து திருப்பி போடவும்
  13. நன்கு வெந்தவுடன் எடுத்து விடவும்
  14. ஆப்கானி மட்டன் கிரேவி இன் செய்முறை
  15. முந்திரி பாதாம் பிஸ்தாவை வெந்நீரில் ஊற வைக்கவும்
  16. மட்டனை நன்கு கழுவி கொள்ளவும்
  17. இஞ்சி பூண்டு தயிர் வத்தல் பொடி மஞ்சள் பொடி சேர்த்து 30 நிமிடங்கள் நன்கு ஊற வைக்கவும்
  18. வத்தல் மிளகாய் மிளகு ஏலக்காய் பட்டை கிராம்பு கடாயில் வறுத்து கொள்ளவும்
  19. ஆறவிடவும்
  20. பிறகு வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  21. ஆற வைத்து வத்தல் மிளகாய் மிளகு ஏலக்காய் பட்டை கிராம்பு மிக்சியில் நன்கு தெரிந்து கொள்ளவும்
  22. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கிளறவும்
  23. பிறகு சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  24. பிறகு சிறிது வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறவும்
  25. ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறவும்
  26. பிறகு தண்ணீரில் ஊற வைத்த முந்திரி பாதாம் பிஸ்தாவை மையாக மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்
  27. மட்டன் வெந்தவுடன் முந்திரி பருப்பு பாதாம் கலவையை சேர்க்கவும்
  28. நன்கு கொதித்த உடன் புதினா மல்லி இலை தூவவும்
  29. இப்பொழுது ஆப்கானிய மட்டன் கிரேவி ரெடி ஆகிவிட்டது
  30. ரூமாலி ரொட்டி உடன் ஆஃப்கானி மட்டன் சுவைத்து மகிழுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்