வீடு / சமையல் குறிப்பு / கார்லிக் பிரெட்

Photo of Garlic Bread by Malar Prabhu at BetterButter
632
0
0.0(0)
0

கார்லிக் பிரெட்

Sep-24-2018
Malar Prabhu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார்லிக் பிரெட் செய்முறை பற்றி

கார்லிக் பிரெட் ஒரு சுவையான, சுலபமாக வீட்டில் செய்யக் கூடிய பிரெட் ஆகும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • இத்தாலிய
  • பேக்கிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா - 2.5 கப்
  2. சர்க்கரை - 3 ஸ்பூன்
  3. உப்பு - 1/2 ஸ்பூன்
  4. ஈஸ்ட் - 1 ஸ்பூன்
  5. 3/4 கப் - வெதுவெதுப்பான பால்
  6. 1 முட்டை
  7. வெண்ணெய் - 4 ஸ்பூன்
  8. கார்லிக் வெண்ணெய்
  9. வெண்ணெய் - 1 கப்
  10. உப்பு - 1 ஸ்பூன்
  11. வெங்காயத்தாள் - 1/2 கப்
  12. பொடியாக நறுக்கிய பூண்டு -4 ஸ்பூன

வழிமுறைகள்

  1. முதலில் 1 கப் வெண்ணெய், நறுக்கிய வெங்காயத் தாள், நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக கலந்து Fridge யில் வைக்கவும
  2. ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு, முன்று கிணறு மாதிரி பள்ளம் செய்துக் கொள்ளவும்.ஒவ்வொரு பள்ளத்திலும் முறையை சர்க்கரை, உப்பு,ஈஸ்ட். போடவும்
  3. ஒரு மரக்கரண்டியில் மாவுக் கலவையை நன்றாகக் கலக்கவும்
  4. வெதுவெதுப்பான பாலும், அடித்து வைத்துள்ள 1 முட்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்
  5. வெண்ணெய்யை சேர்த்துக் கலக்கவும். மாவு பசைப் போல் வரும் வரை கலக்கவும்
  6. வெண்னெய் தடவிய ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு cling wrap செய்து வெதுவெதுப்பான இடத்தில் 1மணி நேரம் வைக்கவும்
  7. 1 மணி நேரம் கடந்தப் பிறகு மாவை மரக்கரண்டியில் எடுத்துப் பார்க்கும் பொது மாவில் ஓட்டை ஓட்டையாக தெரிய வேண்டும.
  8. மரப்பலகையில் மைதாவை தூவிவிட்டு மாவை விரல்களைப் பயன்படுத்தி மடித்து மடித்து விடவும்
  9. மாவை பிசையக் கூடாது
  10. தேவைப்பட்டால் கொஞ்சம் மைதாவை தூவிக் கொள்ளவும்
  11. மாவை தட்டையாக கையால் செய்துக் கொள்ளவும.
  12. மாவை 16 பகுதியாக வெட்டிக் கொள்ளவும்
  13. மாவை பந்துப் போல் உருட்டிக் கொள்ளவும் . மாவை தூவி ஒட்டிக் கொள்ளமால் பார்த்துக் கொள்ளவும்
  14. ஒவ்வொரு பந்தையும் கையால் தட்டையாக உருட்டி அதனுள் கார்லிக் வெண்ணெயை வைத்து முழுதுமாக மடிக்காமல் பாதியாக மடித்து பூ இதழ் மாதிரி மடித்து வைக்கவும் .
  15. எல்லா மாவையும் இதை முறையில் செய்து வைக்கவும்
  16. பேக்கிங் பாத்திரத்தில் செய்து வைத்துள்ளவைகளை வைத்த.cling wrap யில் மூடி போட்டு 1/2 மணி நேரம் வைக்கவும்.
  17. பின்பு முட்டையை தடவி. அவனில் 175 °C வைத்து 30 நிமிடம் பொன்னிறமாக, பொங்கி வரும் வரை வைக்கவும்
  18. 10 நிமிடம் கடந்த பிறகு எடுத்தால் சுவையான கார்லிக் பிரைட் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்