வீடு / சமையல் குறிப்பு / இட்லியும் புதினா சட்னியும்

Photo of Idli& Mint Chutney by Jayasakthi Ekambaram at BetterButter
453
0
0.0(0)
0

இட்லியும் புதினா சட்னியும்

Sep-25-2018
Jayasakthi Ekambaram
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இட்லியும் புதினா சட்னியும் செய்முறை பற்றி

புதினா கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து அரைக்கும் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி அரிசி இரண்டரை டம்ளர்
  2. உளுந்து அரை டம்ளர்
  3. ஜவ்வரிசி கால் டம்ளர்
  4. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  5. உப்பு ஒரு ஸ்பூன்
  6. புதினா சட்னி செய்வதற்கு
  7. புதினா இலைகள் இரண்டு கைப்பிடி அளவு
  8. கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு
  9. கறிவேப்பிலை ஒரு கொத்து
  10. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  11. சிறிய வெங்காயம் மூன்று
  12. சிறிய தக்காளி ஒன்று
  13. தேங்காய் கால் மூடி
  14. உளுந்து ஒரு ஸ்பூன்
  15. காய்ந்த மிளகாய் இரண்டு
  16. புளி நெல்லிக்காயளவு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசியுடன் ஜவ்வரிசியை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. அரிசி மாவையும் உளுந்து மாவையும் உப்பு போட்டு ஒன்றாகக் கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்
  4. 8 மணி நேரத்திற்கு பிறகு இட்லி தட்டில் ஊற்றி இட்லிகளை வேக வைத்து எடுக்கவும்
  5. புதினா சட்னி செய்வதற்கு
  6. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  7. கொத்தமல்லி கருவேப்பிலை புதினா இலைகளை நன்றாக இரண்டு மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்
  8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்
  9. வெங்காயம் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்
  10. புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இலைகளை நன்றாக வதக்கவும்
  11. காய்ந்த மிளகாயையும் அதில் போட்டு வதக்கவும்
  12. தேங்காயைத் துருவிக் கொள்ளவும்
  13. மிக்ஸியில் முதலில் தேங்காயை நன்றாக அரைத்துக் கொண்டு அதில் வதக்கியவற்றை போட்டு அரைக்கவும்
  14. புளியில் உப்புத்தூள் கலந்து கொண்டு நன்றாக கரைத்து அதை சட்னியுடன் கலந்து அரைக்கவும்
  15. எண்ணையை காயவைத்து ஒரு ஸ்பூன் கடுகு தாளித்து அதில் சேர்க்கவும்
  16. சூடான இட்லியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்