பீட்ரூட் மசாலா தோசை | Beetroot Masala Dosa in Tamil

எழுதியவர் Rachell Revathi Samuel  |  25th Sep 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Beetroot Masala Dosa by Rachell Revathi Samuel at BetterButter
பீட்ரூட் மசாலா தோசைRachell Revathi Samuel
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

0

0

பீட்ரூட் மசாலா தோசை recipe

பீட்ரூட் மசாலா தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Beetroot Masala Dosa in Tamil )

  • தோசை மாவு
  • பீட்ரூட் மிகச் சிறியது 1
  • வெண்ணெய் தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • மசாலா: உருளைக்கிழங்கு 3
  • எண்ணெய் 2 ஸ்பூன்
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • வெங்காயம் 1
  • இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  • கருவேப்பிலை சிறிது
  • மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு

பீட்ரூட் மசாலா தோசை செய்வது எப்படி | How to make Beetroot Masala Dosa in Tamil

  1. உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
  2. உருளைக்கிழங்கை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  5. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் வதங்கியதும் கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
  8. மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  9. மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  10. தண்ணீர் வற்றும் வரை வதக்கி இறக்கவும்.
  11. தோசைக்கு தேவையான மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  12. பீட்ரூட் துருவி கொள்ளவும்.
  13. துருவிய பீட்ரூட்டை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  14. தோசை மாவில் அரைத்த பீட்ரூட்டை சேர்க்கவும்.
  15. நன்கு கலந்து கொள்ளவும்.
  16. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.வெண்ணெய் சேர்க்கவும்.
  17. வெண்ணெய் உருகும் வரை காத்திருக்கவும்.
  18. உருளைக்கிழங்கு மசாலாவை தோசை மேல் பரப்பி விடவும்.
  19. தோசை வெந்ததும் மடித்து எடுக்கவும்.
  20. இப்படியும் மடித்து எடுக்கலாம்.
  21. சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் மசாலா தோசை தயார்.

எனது டிப்:

விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

Reviews for Beetroot Masala Dosa in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.