வீடு / சமையல் குறிப்பு / சங்கரா மீன் வறுவல் ரசம்

Photo of Salmon fish fry,rasam by Jaleela Kamal at BetterButter
499
2
0.0(0)
0

சங்கரா மீன் வறுவல் ரசம்

Sep-25-2018
Jaleela Kamal
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சங்கரா மீன் வறுவல் ரசம் செய்முறை பற்றி

சுடு சாதத்துடன் ,குழைவா ரசம் மீன் வறுவல் செம்மையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் வறுவலுக்கு
  2. சங்கரா மீன் 400 கிராம்
  3. மிளகாய் தூள் ஒரு மேசைகரண்டி
  4. உப்பு ஒரு தேக்கரண்டி
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒன்னறை தேக்கரண்டி
  6. எலுமிச்சை சாறு ஒரு மேசை கரண்டி
  7. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  8. மிளகு தூள் அரை தேக்கரண்டி
  9. ஆலிவ் ஆயில் 3 தேக்கரண்டி
  10. ரசம் தயாரிக்க
  11. புளி ஒரு நெல்லிக்காய் சைஸ்
  12. நெய் ஒரு தேக்கரண்டி
  13. கடுகு அரை தேக்கரண்டி
  14. கருவேப்பிலை சிறிது
  15. பச்ச மிளகாய் ஒன்று
  16. பூண்டு இரண்டு பல்
  17. ரசம்.பொடி ஒரு தேக்கரண்டி
  18. பெருங்காய பொடி கால் தேக்கரண்டி
  19. கொத்து மல்லி தழை சிறிது
  20. தக்காளி அரை பழம்

வழிமுறைகள்

  1. முதலில் சங்கரா மீனை சுத்தம்.செய்து குறுக்காக லைனாகா கீரல் போடவும்.
  2. மீனுக்கு தேவையான மசாலாக்ளை சேர்த்து கலக்கி மீனில்.நன்கு தடவி ஊறவைக்கவும். அதற்குள் ரசம்.தயாரித்து கொள்வோம்.
  3. புளியை கழுவி சுடு வெண்ணீரில் ஊறவைக்கவும்
  4. இரண்டறை டம்ளர் அளவிற்கு கரைத்து வைத்து கொள்ளவும்
  5. புளியில் தக்காளி பழதத்தை இரண்டாக அரிந்து சேர்த்து ரசம் பொடி மஞ்சள் தூள் உப்பு சிறிது கொத்துமல்லி தழை மற்றும் கருவேப்பிலை கிள்ளி போட்டு கொதிக்க விடவும்.
  6. தனியாக ஒரு சின்ன தாளிப்பு கரண்டியில் நெய்,கடுகு,(பூண்டு,கருவேப்பிலை,பச்சமிளகாய்) மூன்றையும் தட்டி சேர்த்து வதக்கி பெருங்காய பொடி சேர்த்து வதக்கி கொதித்து வைத்து இருக்க்கும் ரசத்தில்.கொட்டி கலக்கவும்.
  7. ஏர் பிரையரில் மசாலா தடவிய மீனை அரேஞ்ச் செய்து சிறிது ஆலிவ் ஆயில்.ஊற்றி மீனை இரண்டு பக்கமும் 7 , 7 நிமிடங்கள் பொரித்து எடுக்கவும்.
  8. சுவையான் ரசம்.மீன் ப்ரை ரெடி. பிலைன் சாதத்துடன் இரவு உணவாக சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்