வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி தேங்காய் குருமா

Photo of Coconut peas kuruma by Abinaya bala at BetterButter
344
0
0.0(0)
0

பட்டாணி தேங்காய் குருமா

Sep-25-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி தேங்காய் குருமா செய்முறை பற்றி

பட்டாணி மற்றும் தேங்காயை கொண்டு செய்யப்படும் குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பட்டாணி ஒரு கப்
  2. தேங்காய் அரை மூடி
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி-2
  5. பச்சை மிளகாய் 2
  6. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  7. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  8. மல்லி தூள் 2 டீஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு
  10. பிரிஞ்சி இலை அன்னாசிப் பூ பட்டை ஏலக்காய் கிராம்பு தலா ஒன்று
  11. பூண்டு பல் 10
  12. சோம்பு ஒரு டீஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. எண்ணை தேவையான அளவு
  15. கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு
  16. தாளிக்க கடுகு

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காய் சோம்பு கசகசா பச்சை மிளகாய் பூண்டு கரம் மசாலா பொருட்கள் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
  2. வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கி கொள்ள வேண்டும் பின் தேவையான மசாலா பொருட்களையும் சேர்த்து நீர் சேர்த்து கொதிக்க விடவும்
  3. பின் அதனுடன் வேக வைத்த பட்டாணி மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  4. நன்கு கொதி வந்த உடன் கொத்தமல்லித்தழை தூவி தாளித்து இறக்கவும்
  5. சுவையான தேங்காய் பட்டாணி குருமா ரெடி..இது சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்றதாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்