வீடு / சமையல் குறிப்பு / காயல் ஸ்பெஷல் களறி சாப்பாடு

Photo of Kayal Special Kalari Sapadu by Najeeba Refaye at BetterButter
2059
2
0.0(0)
0

காயல் ஸ்பெஷல் களறி சாப்பாடு

Sep-28-2018
Najeeba Refaye
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காயல் ஸ்பெஷல் களறி சாப்பாடு செய்முறை பற்றி

சுவைமிக்க காயல் களறி சாப்பாடு - காயல்பட்டிணம் ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கறி 1/2 கிலோ
  2. வெங்காயம் 4
  3. தயிர் 50 கிராம்
  4. நெய் 50 கிராம்
  5. தேங்காய் எண்ணெய் 50 கிராம்
  6. ஆயில் 50 கிராம்
  7. முந்திரிப் பருப்பு 25 கிராம்
  8. ஏலம் கருவா கிராம்பு தே. அளவு
  9. இஞ்சி பூடு பேஸ்ட் 4 டீஸ்பூன்
  10. சோம்புத்தூள் 2 டீஸ்பூன்
  11. சீரகத்தூள் 1 டீஸ்பூன்
  12. மஞ்சள்தூள் 1 1/2 டீஸ்பூன்
  13. மிளகாய்தூள் 2 டீஸ்பூன்
  14. மல்லித்தூள் 2 டீஸ்பூன்
  15. காயல் மசாலாத்தூள் 3 டீஸ்பூன்
  16. கருவேப்பிலை & உப்பு தே.அளவு
  17. தேங்காய்பால் 1 கப்
  18. வாழைக்காய் 1
  19. பச்சை மிளகாய் 3

வழிமுறைகள்

  1. கறியைக் கழுவி விட்டு அதனுடன் காயல் மசாலாத்தூள், சோம்புத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கறியில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.முந்திரிப் பருப்பை அரைத்து வைக்கவும்.
  2. குக்கர் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும், நெய், ஆயில் இவற்றை ஊற்றி, முதலில் கருவேப்பிலைப் போட்டு வெங்காயம் போட்டு, இஞ்சி பூடு பேஸ்ட் ஏலம், கருவா, கிராம்பு, தயிர் எல்லாவற்றையும் போட்டு பொன்னிறமாக அது ஆனவுடன் கறியைப் போட்டு 4 விசில் வரும் வரை விடவும். (கறியின் தன்மை பார்த்து விசில் விடவும்.)
  3. பிறகு அரைத்த முந்திரிப்பருப்பு, தேங்காய்பால், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் போது, வாழைக்காயை வெட்டிப் போட்டு, பச்சை மிளகாய் போட்டு,15 நிமிடங்கள் தீயைக் குறைத்து வைத்து, சாதா மூடி போட்டு மூடி விடவும். பிறகு திறக்கவும். *களறிக்கறி ரெடி*

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்