வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி அல்வா

Photo of THIRNELVELI HALWA by Juvaireya R at BetterButter
533
3
0.0(0)
0

திருநெல்வேலி அல்வா

Sep-29-2018
Juvaireya R
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி அல்வா செய்முறை பற்றி

தென்மாவட்டங்களில் மிகவும் பிரபலமான இனிப்பு அல்வா இதற்க்கு பெயர்ப்போன ஊர் திருநெல்வேவலி சூடான அல்வாவை இலையில் வைத்து கொடுப்பார்கள் இருட்டுக்கடையில்.

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 250 கிராம் சம்பா முழு கோதுமை
  2. சர்க்கரை 2 .5 கப்
  3. 1/2 கப் சர்க்கரை கேரமல் செய்ய
  4. 3.5 கப் தண்ணீர்
  5. 250 கிராம் நெய்
  6. முந்திரிப்பருப்பு சிறிதளவு

வழிமுறைகள்

  1. முழு கோதுமையை 8 மணி நேரம் ஊற வைக்கவும் தண்ணீரில்.
  2. ஊறிய கோதுமையை மின் கலவையின் உதவியால் அரைக்கவும்.
  3. அரைத்த பாலை வடிகட்டியின் உதவியால் வடித்துக் கொள்ளவும்.
  4. ஒரு கப் தண்ணீர் சேர்த்து அந்த பாலை மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் மூடிவைக்கவும்.
  5. நான்கு மணி நேரம் கழித்து பால் அடியிலும் மேலே தண்ணீர் தெளிந்தும் இருக்கும்.
  6. அந்தத் தண்ணீரை மெதுவாக கீழே ஊற்றவும்
  7. கோதுமை பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் 1கப் தண்ணீர் சேர்க்கவும்.
  8. அடி கனமான பாத்திரத்தை எடுத்து அதில் 2 கப் சர்க்கரை சேர்த்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றவும்.
  9. நன்கு சூடு ஏற்றி சர்க்கரை கரையும் வரை கிளறி விடவும்
  10. அதே சமயத்தில் வேறொரு அடுப்பில் வேறொரு பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கேரமல் செய்யவும்.
  11. நன்கு பழுப்பு நிறத்தில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  12. அந்தக் கேராமல்லை சர்க்கரைக் கலவையில் சேர்த்துக் கிளறவும்
  13. சர்க்கரை கலவையை ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
  14. பின் கோதுமை கோதுமை பால் சேர்த்து நன்கு கிளறவும்.
  15. அக்கா அளவு இல் 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
  16. கலவையை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
  17. 20 நிமிடம் கழித்து ஒரு அளவிற்கு கெட்டிபதமான தன்மை வரும் .
  18. நெய்யை சிறிதளவு ஊற்றிக் கொண்டே இருக்கவும்.
  19. ஒரு நிமிடம் கழித்து நன்றாக ஒரு அளவிற்கு அல்வா பதத்திற்கு வரும்.
  20. நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்றாகக் கிளறவும்
  21. ஒன்றரை நிமிடம் கழித்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
  22. அப்பதம் வரும் வரை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும் இல்லை என்றால் குட்டி விழுந்து விடும்.
  23. அல்வா பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  24. சூடான சுவையான திருநெல்வேலி அல்வா தயார்.
  25. ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு சூடான சுவையான அல்வா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்