வீடு / சமையல் குறிப்பு / சேனை,வாழை எரிசேரி( திருநெல்வேலி நாகர்கோவில் ஸ்பெஷல்)

Photo of Yeriseri by Deepa Srivatsan at BetterButter
401
2
0.0(0)
0

சேனை,வாழை எரிசேரி( திருநெல்வேலி நாகர்கோவில் ஸ்பெஷல்)

Sep-30-2018
Deepa Srivatsan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சேனை,வாழை எரிசேரி( திருநெல்வேலி நாகர்கோவில் ஸ்பெஷல்) செய்முறை பற்றி

சேனை மற்றும் வாழைக்காயில் திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் பக்கம் இதை செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சேனைக்கிழங்கு அரை கிலோ
  2. வாழைக்காய் 2
  3. தேங்காய் துருவல் அரை மூடி
  4. மிளகாய்வற்றல் 2
  5. சீரகம் அரை ஸ்பூன்
  6. மிளகு ஒரு ஸ்பூன்
  7. அரிசி ஒரு ஸ்பூன்
  8. தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
  9. கடுகு அரை ஸ்பூன்
  10. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  11. கறிவேப்பிலை சிறிதளவு
  12. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சேனை மற்றும் வாழைக்காயை தனித்தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  2. மிளகை தனியாக மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும்
  3. சேனைக்கிழங்கை குக்கரிலும் வாழைக்காயை தனியாக சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  4. தேங்காய் மிளகாய் வற்றல் அரிசி சீரகம் ஆகியவற்றை மிக்சியில் நன்றாக நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி கால் டீஸ்பூன் கடுகு போட்டு சென்னை மற்றும் வாழைக்காயைப் போட்டு உப்பு சேர்க்கவும்
  6. பின் பொடித்து வைத்துள்ள மிளகுத்தூளை அதனுடன் சேர்க்கவும்
  7. அதன் பின் அரைத்த விழுதை சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்
  8. இறக்கியபின் தேங்காய் எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்