வீடு / சமையல் குறிப்பு / கோயம்புத்தூர் மட்டன் குழம்பு

Photo of Coimbatore lamb curry by Vinothini Manoharan at BetterButter
609
1
0.0(0)
0

கோயம்புத்தூர் மட்டன் குழம்பு

Oct-01-2018
Vinothini Manoharan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோயம்புத்தூர் மட்டன் குழம்பு செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீரகம் 2 ஸ்பூன்
  2. மிளகு 1 ஸ்பூன்
  3. வர மிளகாய் 8
  4. கொத்துமல்லி 3ஸ்பூன்
  5. சின்ன வெங்காயம் 200 கிராம்
  6. பூண்டு 8 பல்
  7. இஞ்சி 2 இன்ச்
  8. துருவிய தேங்காய் அரை கப்
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. மட்டன் ஒரு கிலோ
  11. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  12. கருவேப்பிலை சிறிதளவு
  13. கொத்துமல்லித்தழை சிறிதளவு
  14. சோம்பு ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, மல்லி, வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்
  2. கருக்காமல் நன்றாக வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  3. பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்
  4. வெங்காயம் பொன்னிறமானதும் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும் வதக்கி அடுப்பை அணைத்து விட வேண்டும்
  5. சூடு ஆறியதும் முதலில் சீரகம் மிளகு கொத்தமல்லி மிளகாய் பொடியாக அரைத்துக் கொண்டு அதன் பிறகு வெங்காயம் இஞ்சி பூண்டு தேங்காய் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்
  6. அதிகம் தண்ணீர் விட்டு அரைக்க வேண்டாம்
  7. பிறகு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு ஸ்பூன் சோம்பு 6 சின்ன வெங்காயம் சிறிது கறிவேப்பிலை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்
  8. அதில் சுத்தமாக கழுவி வைக்கப்பட்ட மட்டனை அதனுடன் சேர்த்து கலக்க வேண்டும்
  9. அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்
  10. தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்( அதிகம் தண்ணீர் வேண்டாம் ஏனென்றால் மட்டன் சிறிது நீர் விடும்)
  11. பிறகு குக்கரை மூடி 8 முதல் 10 வைத்துவிட வேண்டும்
  12. விசில் அடங்கியதும் சிறிது கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்